அமிர்தத் தோட்டத்தின் திறப்பு விழாவில் குடியரசுத்தலைவர் பங்கேற்றார்.

2026-ம் ஆண்டு குளிர் பருவத்தையொட்டி, குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள அமிர்தத் தோட்டம் இன்று திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார் (பிப்ரவரி 1, 2026).

குடியரசுத்தலைவர் மாளிகையில் உள்ள அமிர்த தோட்டம் பொதுமக்களின் பார்வைக்காக 2026 பிப்ரவரி 3 முதல் மார்ச் 31 வரை திறக்கப்பட்டு இருக்கும். பொதுமக்கள் இத்தோட்டத்தை வாரத்தில் 6 நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பார்வையிடலாம். இத்தோட்டம் பராமரிப்பு பணிகளுக்காக திங்கட்கிழமைகளிலும், ஹோலிப்பண்டிகையையொட்டி மார்ச் 4 அன்றும் மூடப்பட்டு இருக்கும். மார்ச் 3 அன்று பாதுகாப்பு படையினருக்காகவும், மார்ச் 5 அன்று மூத்த குடிமக்களுக்காகவும், மார்ச் 10 அன்று மகளிர் மற்றும் சுயஉதவிக்குழுக்களைச் சேர்ந்த பழங்குடியின பெண்களுக்காகவும், மார்ச் 13 அன்று மாற்றுத்திறனாளிக்காகவும் பிரத்யேகமாகத் திறக்கப்படுகிறது.

இத்தோட்டத்தை கட்டணமின்றி பதிவு செய்து பார்வையிடலாம்.  https://visit.rashtrapatibhavan.gov.in/ என்ற இணையதளம் மூலம் வருகையை பதிவு செய்யலாம். பார்வையாளர்கள் இணையதளம் வாயிலாக மட்டுமே நுழைவுச்சீட்டுகளைப் பதிவு செய்ய முடியும். பார்வையாளர்கள் எந்த நாளில் தோட்டத்தை பார்வையிட விரும்புகிறாரோ இந்த நாளுக்கு முந்தைய நாள் காலை 10 மணியுடன் அதற்கான பதிவு நிறைவடையும். பார்வையாளர்கள் மொபைல் போன், மின்னணு சாதனங்கள், கைப்பைகள், தண்ணீர் பாட்டில்கள், குழந்தைகளுக்கான பால் பாட்டில்கள் ஆகியவற்றை எடுத்துச் செல்லலாம். குடிநீர் வசதி, கழிவறை வசதி, முதலுதவி வசதி ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply