2026 – 27 மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை! -உண்மை நகல் முழு விவரம்!

budget_speech

2026 – 27-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து பேசிய திருமதி நிர்மலா சீதாராமன், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்கில் சீர்திருத்த தருணங்களை விரைவுபடுத்துவதற்கு 3 கடமைகளை பரிந்துரைத்தார். உற்பத்தி மற்றும் போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கு நீடித்த பொருளாதார வளர்ச்சி என்பது முதலாவது கடமையாகும். மக்களின் விருப்பங்களை நிறைவேற்றி அவர்களுடைய திறனை மேம்படுத்தி வளர்ச்சிக்கான இந்தியாவின் பாதையில் வலிமையான கூட்டாளர்களாக அவர்களை மாற்றுவது இரண்டாவது கடமையாகும். அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்ற தொலைநோக்கு பார்வையுடன் அர்த்தமுடைய பங்கேற்புக்காக, நிதி, வசதிகள் மற்றும் வாய்ப்புகளை ஒவ்வொரு குடும்பமும், சமூகமும், பிராந்தியமும் பெறுவதை உறுதி செய்வது மூன்றாவது கடமையாகும்.

இந்த மூன்று அணுகுமுறைக்கு ஆதரவான சூழல் தேவை என்று நிதியமைச்சர் கூறினார். கட்டமைப்பு சீர்திருத்தங்களின் தருணத்தை தக்கவைப்பது முதல் தேவையாகும். அதாவது, தொடர்ச்சியான ஏற்றுக்கொள்ளக்கூடிய மற்றும் தொலைநோக்குடன் கூடியதாக இது இருக்க வேண்டும். இரண்டாவதாக சேமிப்புகளை திரட்டுவதற்கும், மூலதன திறனை ஒதுக்கீடு செய்வதற்கும், இடர்பாடுகளை எதிர்கொள்வதற்கும், வலுவான மையமாக நிதித்துறை உள்ளது. மூன்றாவதாக செயற்கை நுண்ணறிவு பயன்பாடு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் சிறந்த நிர்வாகத்திற்கு ஒரு ஊக்க சக்தியாக இருக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.

முக்கிய குறிப்பு: மத்திய அரசின் 2026-27 நிதிநிலை அறிக்கை முழு விவரம் pdf வடிவத்தில் இந்த செய்தியில் நாம் பதிவேற்றம் செய்துள்ளோம். இந்த பட்ஜெட் உரைக் குறித்து அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் பாரபட்சமற்ற உண்மையான நடுநிலையான விமர்சனங்களையும், கருத்துக்களையும் நேர்மையான மனிதர்களிடமிருந்து வரவேற்கிறோம். அதுதான் நாட்டின் வளர்ச்சிக்கு பயனுள்ளதாக இருக்கும். அது எதிர்காலத்தில் வழிகாட்டும் நெறிமுறையாகவும் அமையும். சாதி மத அரசியல் பேதம் இன்றி இந்த பட்ஜெட் குறித்தான நேர்மையான விமர்சனங்கள் மற்றும் கருத்துக்கள் நமது ஊடகத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அத்தோடு ரூ. 10000/-மதிப்புள்ள சிறப்பானப் பரிசும் வழங்கப்படும்.

Leave a Reply