சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரியின் கேன்டீனில் வேலை செய்து வந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது
சட்டம் ஒழுங்கை கடுமையாக்கி பாலியல் தொந்தரவுகளுக்கு மிகவும் கடுமையான தண்டனை கிடைக்கும் என்பதை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கைகள் எடுத்து பாலியல் துன்புறுத்தல்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.
============== #அறிக்கை ===============
சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரியின் கேன்டீனில் வேலை செய்து வந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது.
சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரியின் கேன்டீனில் வேலை செய்து வந்த 20-22 வயதுடைய இளம்பெண், கேன்டீன் உரிமையாளர் மற்றும் ஊழியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் கொடுமையிலும் கொடுமை.
இந்த கொடுமையில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அதிகபட்ச தண்டனையை காலம் தாழ்த்தாமல் பெற்றுத்தர வேண்டியது தமிழக அரசின் கடமை.
கல்வியைக் கற்றுக்கொடுக்கும் வளாகத்திலேயே மனிதாபிமானம் இல்லாமல் குற்றச்செயல்கள் நடைபெறுகிறது என்றால் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் மீது பயம் இல்லாத நிலையையே எடுத்துக்காட்டுகிறது.
அது மட்டுமல்ல பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுகைளுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என்பதை உறுதி செய்யும் வகையில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைத்து, அது பொது வெளியில் தெரியும் பட்சத்தில் குற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு பயம் ஏற்படும்.
மேலும் தமிழக அரசும், பொது மக்களும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்பதை தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எஸ்.திவ்யா
