இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மீது தாக்குதல்!- தமிழக அரசு முக்கியத் தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை தவறாமல் செய்து கொடுக்க வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

இந்து மக்கள் கட்சி தலைவர் திரு. அர்ஜூன் சம்பத் அவர்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சித்த சம்பவம் கண்டிக்கத்தக்கது.

அர்ஜூன் சம்பத் அவர்கள் திருச்சி நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு சம்பந்தமாக ஆஜராக சென்ற போது அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடைபெற்ற சம்பவம் முறையல்ல.

நீதிமன்ற வளாகத்தில் எதிர்ப்புக்கும், வீண் சண்டைக்கும், பரபரபுக்கும் இடம் இல்லாத வகையில் பாதுகாப்பு இருக்க வேண்டும்.

வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்திற்கு சென்ற இந்து மக்கள் கட்சியின் தலைவருக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்க தவறியதால் தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நீதிமன்ற வளாகத்தில் நடைபெறாமல் இருக்க வேண்டும்.

தமிழக அரசு முக்கியத் தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை தவறாமல் செய்து கொடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply