மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து-நடராசன் சிலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து-நடராசன் சிலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். தியாகிகள் நினைவு நாளையொட்டி நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு வீர முழக்கங்களையும் எழுப்பினார். மொழிப்போரின் வெற்றி வெளிச்சத்திற்கு ஒளிவிளக்குகளாய் நின்று உயிர்துறந்த திருவாளர்கள் நடராசன்-தாளமுத்து இருவரும் தமிழுணர்வு கொண்டோரின் மனத்தில் நீங்கா இடம் பெற்று இன்றும் நினைவுகூரப்படுகிறார்கள்.

“தமிழ்மொழித் தியாகிகள் நினைவு நாள்” இந்தி எதிர்ப்புப் போரில் சிறை சென்று உயிர் நீத்த தோழர்கள் நடராசன் மற்றும் தாளமுத்து ஆகியோரது தியாகத்தைப் போற்றும் வண்ணம் நினைவிடத்தை சென்னை மூலக்கொத்தளத்தில் பெரியார் அடிகோலி திறந்துவைத்தார்.

இந்த நினைவிடத்தினைப் பொலிவேற்றம் செய்திடவும். ஜனவரித் திங்கள் 25ம் நாளை “தமிழ்மொழித் தியாகிகள் நினைவு நாள்” என்னும் பெயரில் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் எனவும் அறிவித்து ஆணையிடப்பட்டதைத் தொடர்ந்து, 25.1.2025 அன்று பொலிவேற்றம் செய்யப்பட்ட நினைவிடத்தை முதல்வரால் திறந்துவைக்கப்பட்டது.

மேலும், இந்நிகழ்வின்போது “மொழிப்போரின் வெற்றி வெளிச்சத்திற்கு ஒளிவிளக்குகளாய் நின்று உயிர்நீத்த திருவாளர்கள் தாளமுத்து-நடராசன் ஆகிய இருவருக்கும் சென்னை, எழும்பூரில் உள்ள தாளமுத்து-நடராசன் மாளிகை வளாகத்தில் திருவுருவச்சிலை நிறுவப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

Leave a Reply