உரிய காலத்தில், உரிய இடத்தில், உரியவர்களோடு ஒன்றிணைந்து, உறுதியாகச் செயல்பட்டால் வெற்றி என்பது நிச்சயம். அத்தகைய தருணம் இப்போது நமக்கு கிடைத்துள்ளது’’ என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் மதுராந்தகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற இந்த கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘‘இன்று இந்தியாவே மதுராந்தகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி இந்த மண்ணில் கால் வைத்த உடனே, இயற்கையே சூரியனை மறைத்துவிட்டது. மதுராந்தகமே குலுங்கும் அளவுக்கு மக்கள் வெள்ளமென கூடி இருக்கிறார்கள். நாம் பெறப்போகும் வெற்றிக்கு இதுவே சான்று.
உரிய காலத்தையும் இடத்தையும் தேர்ந்தெடுத்து செயல்பட்டால், உலகத்தையே கையில் அடக்கலாம் என திருவள்ளுவர் கூறி இருக்கிறார். நம்மை எதிர்ப்பவர்கள் எத்தகைய வஞ்சக நெஞ்சம் கொண்டவர்களாக இருந்தாலும், தீயவர்களாகவும் இருந்தாலும் உரிய காலத்தில், உரிய இடத்தில், உரியவர்களோடு ஒன்றிணைந்து, உறுதியாகச் செயல்பட்டால் வெற்றி என்பது நிச்சயம். அத்தகைய தருணம் இப்போது நமக்கு கிடைத்துள்ளது.
இவ்வாறு எடப்பாடி கே பழனிசாமி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சி.கார்த்திகேயன்
