“தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம் மற்றும் மராட்டிய மொழிகளில் வெளியாகின்ற தலைசிறந்த இலக்கிய படைப்புகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும் “செம்மொழி இலக்கிய விருது” என்ற தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்படும். விருதுடன், தலா ரூ. 5 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்படும்” என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவின் நிறைவு விழாவில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மனித இனம் தன்னுடைய சிந்தனைகளை, தான் சேர்த்த அறிவுச் செல்வத்தை, பிறருக்கும், அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கொண்டு சேர்க்கும் கருவிதான், புத்தகங்கள்!
வாசிப்பு மூலமாக, தமிழ்நாட்டில் இருக்கின்ற ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும் என்று, ஏராளமான முன்னெடுப்புகளை நம்முடைய திராவிட மாடல் அரசு சார்பில் எடுத்து செய்து கொண்டிருக்கிறோம்! அதில் முக்கியமானது தான், புத்தகத் திருவிழாக்கள்!
எஸ்.திவ்யா
