வேன் மீது கார் மோதியதில் 3 பேர் படுகாயம்! திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபரீதம்.

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காவிரி பாலத்திற்கும் பழைய பால்பண்ணைக்கும் இடையில் இரயில்வே மேம்பாலம் அருகில் இன்று (11.01.2026) பிற்பகல் சுமார் 2:45 மணியளவில் முன்னால் சென்று கொண்டிருந்த வேன் மீது பின்னால் சென்ற கார் மோதியதில் வேன் சாலையில் கவிழ்ந்தது. காரில் இருந்த 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அருகில் இருந்த நபர்களின் உதவியுடன் காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் காயம் அடைந்த நபர்கள் அனைவரும் திருச்சி விமான நிலையம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Leave a Reply