ஆவின் நிறுவனமே மாட்டுத்தீவன உற்பத்தி ஆலைகளை தொடர்ந்து நிர்வகித்து அதன் ஊழியர்களையும் நிறுவனத்தையும் மேம்படுத்த வேண்டும்!- ஜி.கே‌.வாசன் வலியுறுத்தல்.

தமிழக அரசின் ஆவினால் நிர்வகிக்கப்படும் மாட்டுத்தீவன உற்பத்தி ஆலைகளை தமிழக அரசு தனியாரிடம் ஒப்படைக்க மேற்கொள்ளும் முயற்சி ஏற்புடையதல்ல.

தமிழக அரசின் ஆவின் நிறுவனம் மாட்டுத்தீவன உற்பத்தி ஆலைகளை தொடர்ந்து நிர்வகிக்க வேண்டும்.

தற்போது ஆவின் நிறுவனமானது அதன் மாட்டுத்தீவன உற்பத்தி ஆலைகளை தனியாரிடம் ஒப்படைக்க ஏலப்புள்ளி அல்லது டெண்டர் முறையை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது தமிழக அரசால் மாட்டுத்தீவன உற்பத்தி ஆலையை நிர்வகிக்க முடியவில்லையா அல்லது தனியாருக்கு தாரை வார்த்துக் கொடுக்க முன் வருகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

அதாவது ஆவின் நிறுவனம் பால் உற்பத்தியை அதிகரிக்கவும், பால் உற்பத்தியாளர் நலனுக்காகவும் கலப்பு மாட்டுத்தீவனம் (Cattle Feed) மற்றும் தாது உப்புக் கலவைகளை (Mineral Mixtures) உற்பத்தி செய்து, மானிய விலையில் வழங்கி வருகிறது.

குறிப்பாக ஈரோடு, காசிபாளையம், ஓசூர் போன்ற இடங்களில் தீவன உற்பத்தி ஆலைகளைக் கொண்டுள்ளது. இந்த தீவனங்கள் பசுந்தீவனத்துடன் கலந்து மாடுகளுக்கு அளிக்கப்பட்டு, பால் உற்பத்தியை அதிகரிக்க உதவுகின்றன. சில சமயங்களில், பொருளாதாரச் சிக்கல்களால் மானிய விலையிலான தீவனங்கள் நிறுத்தப்பட்டாலும், விவசாயிகள் அதை மீண்டும் தொடங்கக் கோரிக்கை வைத்தனர்.

ஆவின் நிறுவனம் விவசாயிகளுக்கு தரமான தீவனங்களை மானிய விலையில் வழங்கி, பால் உற்பத்தியை ஊக்குவிப்பதில் மாட்டுத்தீவன உற்பத்தி ஆலைகள் ஒரு முக்கிய பங்காற்றுகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள ஆவின் நிறுவன மாட்டுத்தீவன உற்பத்தி ஆலைகளில் சுமார் 125 பேர் பணியாற்றுகிறார்கள். இந்நிலையில் தமிழக அரசு ஆவின் நிறுவன மாட்டுத்தீவன உற்பத்தி ஆலைகளை தனியாரிடம் ஒப்படைக்க டெண்டர் விட்டிருப்பதால் மாட்டுத்தீவன உற்பத்தி ஆலைகளின் பணியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். இவர்கள் ஆவின் நிறுவன மாட்டுத்தீவன உற்பத்தி ஆலைகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது எனக்கோரிக்கை வைத்துள்ளனர்.

       பால் உற்பத்தியை அதிகரிக்க, கால்நடைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, விவசாயிகளுக்கு AAVIN கலப்பு தீவனங்கள் மற்றும் தாது உப்புகளை மானிய விலையில் வழங்க, மாட்டுத்தீவன உற்பத்தி ஆலைகளால் அரசுக்கு இலாபம் கிடைக்க, ஊழியர்களின் பணிப்பாதுகாப்புக்கு உறுதி அளிக்க அரசே மாட்டுத்தீவன உற்பத்தி ஆலைகளை நிர்வகிக்க வேண்டும்.

அப்படி இருக்கும் போது ஆவின் நிறுவன மாட்டுத்தீவன உற்பத்தி ஆலைகளை தனியாரிடம் ஒப்படைக்க தமிழக அரசு முயற்சி மேற்கொண்டது நியாயமில்லை.

மேலும் மாட்டுத்தீவன உற்பத்தி ஆலை என்பது சிறு தொழில் சார்ந்தது மட்டுமல்ல அதன் தொழிலாளர்களின் பணி பாதிக்கப்பட்டால் அவர்களின் குடும்பங்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே அரசின் எந்த நிறுவனத்தையும் தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியை அரசு மேற்கொள்ள வேண்டாம்.

எனவே தமிழக அரசு ஆவின் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் மாட்டுத்தீவன உற்பத்தி ஆலைகளை அரசே தொடர்ந்து செயல்படுத்தி, அதன் ஊழியர்களையும் நிறுவனத்தையும் மேம்படுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply