உலகம் உங்கள் கையில் : மாணவர்களுக்காக மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடக்கம்..!

தமிழ்நாடு அரசின் சார்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை வர்த்தக மையத்தில் 5.1.2026 அன்று மாலை 3:30 மணி முதல் 6:30 மணியளவு வரையில் 10 இலட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க உள்ள மாபெரும் நிகழ்வின் முன்னோட்டமாக காலை 9:30 மணி அளவில், தமிழ்நாடு அரசு நடத்தும் இரு நாள் (05.01.2026 முதல் 06.01.2026 வரையிலான) தொழில்நுட்பக் கண்காட்சியை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தனர்.

‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற மகாகவி பாரதியின் தொடருக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக, உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு மடிக்கணினி வழங்கி, அவர்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கிடவும், உலகளாவிய திறன்களைக் கற்றுத் தேர்ந்திடவும் வழிகாட்டும் நோக்கில் 40 அரங்குகளுடன் பல்வகைத் தொழில்நுட்பக் கண்காட்சி அரங்குகளை அமைச்சர் பெருமக்கள் பார்வையிட்டுச் சிறப்பித்தனர்.

Leave a Reply