ஜி 20 செயலகம், இந்தியக் கடற்படை மற்றும் கடற்படை நலன் மற்றும் நல்வாழ்வு சங்கம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள வெகுசிறப்பான ஜி 20 திங்க் நிகழ்வு, ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஊக்கமளிக்கும் அறிவுசார் அனுபவத்தை வழங்க உறுதியளிக்கிறது. தேசிய அளவிலான விநாடி வினா போட்டியில் 11,700-க்கும் அதிகமான பள்ளிகளைச் சேர்ந்த 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த அறிவார்ந்த பயணத்தைத் தொடங்க, முதலாவது செப்டம்பர் 10, 2023 அன்று, இரண்டாவது செப்டம்பர் 11, 2023 அன்று என இரண்டு பயிற்சி சுற்றுகள் நடத்தப்படும்.
எம்.பிரபாகரன்
