நாடு முழுவதும் நிலக்கரி உற்பத்தி கடந்த 2020-21-ம் ஆண்டு 716.083 மில்லியன் டன்னாக இருந்த நிலையில், 2021-22 ஆண்டில் 778.19 மில்லியன் டன்னாக இருந்தது. மேலும் நடப்பு நிதியாண்டில் (நவம்பர் 2022 வரை) 524.2 மில்லியன் டன் அளவிற்கு நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 448.1 மில்லியன் டன்னாக இருந்தது.
இத்தகவலை மாநிலங்களவையில் மத்திய நிலக்கரி, சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலத் ஜோஷி எழுத்துப்பூர்வமாக கூறினார்.
எஸ்.சதிஸ் சர்மா
