கோவா வேலைவாய்ப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோதி உரை.

கோவா அரசின் வேலைவாய்ப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோதி காணொலி வாயிலாக இன்று உரையாற்றினார்.

தந்தேராஸ் பண்டிகையன்று, தேசிய அளவில், வேலைவாய்ப்பு விழா என்ற திட்டத்தை பிரதமர் அறிமுகப்படுத்தியிருந்தார். மத்திய அரசில் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்கும் பிரச்சாரத்தின் தொடக்கமாக இது அமைந்திருந்தது. அப்போது தொடங்கி குஜராத், ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா அரசுகளால் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு விழாவில் பிரதமர் உரையாடியதோடு, இரண்டு நாட்களுக்கு முன்பு, புதிதாக பணியிலமர்த்தப்பட்டுள்ள 71,000 பேருக்கு பணி நியமன கடிதங்களை வழங்கும் விழாவின்போது பல்வேறு அரசுத் துறைகளில் நியமனம் செய்யப்பட்டுள்ள புதிய பணியாளர்களுக்கு இணைய வழியாக புத்தாக்க பயிற்சி வழங்கும் கர்மயோகி பிராரம்ப் இணையதளத்தையும்  அறிமுகப்படுத்தினார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply