மதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை பாகனை மிதித்தே கொன்றது!-வீடியோ.

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உள்ள ‘மசினி’ என்ற கோவில் யானைக்கு, இன்று திடீரென மதம் பிடித்தது. இதனால் பக்தர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். மதம் பிடித்த யானை தாக்கியதாலும், அலறியடித்து பக்தா்கள் ஓடியதாலும் 8 போ் காயமடைந்தனா். யானையை கட்டுப்படுத்த முயன்ற யானைப் பாகன் கஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதை தொடர்ந்து யானையை கட்டுப்படுத்தும் பணியில் சில யானைப்பாகன்கள் ஈடுபட்டுள்ளனர்.

கோவிலுக்கு வந்துள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். யானை தாக்கி பாகன் உயிரிழந்ததையடுத்து சமயபுரம் கோயில் நடை அடைக்கப்பட்டுள்ளது.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

-வீ.குணசேகரன்.

 

One Response

  1. WelfareVenkataraman. May 25, 2018 6:07 pm

Leave a Reply to WelfareVenkataraman. Cancel reply