தமிழகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம்!-உத்தரவின் உண்மை நகல்.

Niranjan-Mardi.

தமிழக உள்துறை கூடுதல் முதன்மைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி.

IPSPostingsandTransfers-DAte-06.10.20171 IPSPostingsandTransfers-DAte-06.10.20172

டிஜிபி மகேந்திரன்,

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்-Tamil Nadu Generation and Distribution Corporation Ltd (TANGEDCO) லஞ்ச ஊழல் கண்காணிப்பு டிஜிபி மகேந்திரன், தீயணைப்பு மற்றும் மீட்பு படை டிஜிபியாகவும்.

ரயில்வே ஏடிஜிபி ஸ்ரீலட்சுமி பிரசாத், லஞ்சம், ஊழல் ஒழிப்பு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்-Tamil Nadu Generation and Distribution Corporation Ltd (TANGEDCO) ஏடிஜிபியாகவும்,

சைலேந்திர பாபு IPS

சிறைத்துறை ஏடிஜிபி சைலேந்திர பாபு ரயில்வே ஏடிஜிபியாகவும், அமலாக்கத்துறை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா சிறைத்துறை ஏடிஜிபியாகவும்,

தமிழக போக்குவரத்து ஏடிஜிபி மற்றும் சிறப்பு அதிகாரி ராஜேஷ் தாஸ் அமலாக்கத்துறை ஏடிஜிபியாகவும்,

குற்றப்பிரிவு ஏடிஜிபி சுனில்குமார் சீருடை பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினராகவும், சீருடை பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினர் கரன் சின்ஹா போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஏடிஜிபியாகவும்,போக்குவரத்து மற்றும் சாலை போக்குவரத்து ஏடிஜிபி அமரேஷ் பூஜாரி குற்றப்பிரிவு ஏடிஜிபியாகவும்,

என்.கே.செந்தாமரை கண்ணன், IPS

என்.கே.செந்தாமரை கண்ணன், IPS.,

போலீஸ் தொழில் நுட்ப பிரிவு ஐஜி செந்தாமரை கண்ணன் தமிழ்நாடு சீருடை பணியாளர் வாரிய உறுப்பினர் செயலராகவும், தமிழ்நாடு சீருடைபணியாளர் வாரிய உறுப்பினர் செயலர் கல்பனா நாயக் பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாகவும், பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி அசோக் குமார் போலீஸ் தொழில்நுட்ப பிரிவு ஐஜியாகவும்,

சேலம் போலீஸ் கமிஷனர் சஞ்சய் குமார் பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாகவும், அமலாக்கத்துறை ஐஜி சங்கர் சேலம் போலீஸ் கமிஷனராகவும்,

திருச்சி ஆயுதப்படை டிஐஜி தீபக் எம்.தமோர் ரயில்வே டிஐஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை  தமிழக உள்துறை கூடுதல் முதன்மைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com