இலங்கை கடற்பரப்பில் சட்ட விரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டதாக கூறி 49 இந்திய மீனவர்களை நேற்று (07 ஆகஸ்ட் 2017) இரவு இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 12 மீன்பிடி படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள், படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாண உதவி மீன்வளத் திணைக்களத்தில் ஒப்படைத்துள்ளனர்.
-என்.வசந்த ராகவன்.
