இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் கொறடா உத்தரவு பிறப்பித்தாலோ, குறிப்பிட்ட வேட்பாளருக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டாலோ, சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் மீது ஐபிசி-யின் 171சி-பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இத்தேர்தலில் ரகசிய வாக்கெடுப்பு முறை பின்பற்றப்படுவதால் எம்.பி. / எம்.எல்.ஏ.க்கள் தாங்கள் விரும்பும் வேட்பாளருக்கு சுதந்திரமாக வாக்களிக்கலாம். இத்தேர்தலில் வாக்களிப்பதோ, புறக்கணிப்பதோ அது எம்.பி./எம்.எல்.ஏ.க்களின் தனிப்பட்ட விருப்பம். இதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
