திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஷராப் பஜார் பகுதியில் உள்ள அப்பால் செட்டி தெருவில் வசித்து வருபவர் முத்துராமன், இவர் தன் குடும்பத்துடன் உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு வெளியூர் சென்று இருந்தார். இந்நிலையில் நேற்று மாலை முத்துராமனின் வீடடில் மின் கசிவு காரணமாக தீ ஏற்பட்டு வீடு முழுவதும் பற்றிகொண்டது.
இதை கண்ட அக்கம் பக்கத்தினர் ஆரணி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆரணி தீயணைப்பு நிலைய அலுவலர் பேச்சுக்காளை தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீடடில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமடைந்தன.
-மு. ராமராஜ்.
