இலங்கை கடல் எல்லையை மீறி கச்சதீவுக்கு வட புறம் கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டதாக 5 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்று (18.06.2017) கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சொந்தமான மீன்பிடி படகு ஒன்றும், படகில் இருந்த பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் விரிவான விசாரணைக்காக, யாழ்பாண கடற்தொழில் உதவிப்பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
-என்.வசந்த ராகவன்.
