பாளையங்கோட்டை சாந்தி நகரை சேர்ந்த ராஜேஷ் என்பவர், சசிகலா புஷ்பா மற்றும் அவரது கணவர் லிங்கேஸ்வரன் ஆகியோர் மீது மோசடி புகார் அளித்துள்ளார்.
டிராவல்ஸ் நடத்தி வரும் ராஜேஷ் நெடுஞ்சாலை துறையில் புதிய ரோடு மற்றும் சாலைகளுக்கு நடுவில் அமைந்திருக்கும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது ஆகிய பணிகளுக்கு கான்ட்டிராக்ட் எடுக்க முடிவு செய்துள்ளார்.
இந்த பணியை வாங்கி தர வேண்டும் என ராஜேஷ் சசிகலா புஷ்பாவை சந்தித்துள்ளார். கான்ட்டிராக்ட் வாங்கி தருவதற்கு ரூ.20 லட்சம் 2 தவணையாக சசிகலா புஷ்பாவிடம் வழங்கியதாகவும். ஆனால், எவ்வித பணியும் பெற்று தரவில்லை என்றும் இதனால் சசிகலா புஷ்பா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது புகாரில் கூறியுள்ளார்.
நெல்லை மாநகர கமிஷனர் சிவஞானத்திடம் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது.
-க.முருகேசன்.
