ராஜ்யசபா உறுப்பினர் சசிகலா புஷ்பா முதல்வர் ஜெ.ஜெயலலிதா மீது அவதூறு கிளப்புவதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பெரம்பலூர் மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த பாண்டியன் சார்பாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, உள்ளிட்ட வழக்கறிஞர்கள் இன்று திருச்சி மாநகர காவல்துறை துணை ஆணையர் மயில்வாகனனை சந்தித்து மனுக்கொடுத்தனர்.
தன்னை முதல்வர் தாக்கியதாக நாடாளுமன்றத்தில் போய் பேசியிருக்கிறார் சசிகலா புஷ்பா. அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் அவர் வீட்டுக்கு அருகிலுள்ள காவல்நிலையத்தில் இதுபற்றி புகார் அளித்திருக்கலாம். ஆனால், அதை செய்யாமல் நாடாளுமன்றத்தில் தமிழக முதல்வரின் மாண்பை குறைக்கும் வகையில், திட்டமிட்டு அவதூறு பேசியுள்ளார். முதல்வர் தன்னை தாக்கியதாகவும், ராஜினாமா செய்ய வலியுறுத்தியதாகவும் அவர் வாய்மொழியாக மட்டுமே சொல்கிறார். இதற்கு அவரிடம் சாட்சியங்கள் இல்லை.
இப்படி ஆதாரம் இல்லாமல் தமிழக முதல்வர் மீது குற்றஞ்சாட்டியதற்காக சசிகலா புஷ்பா மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-கே.பி.சுகுமார்.
