தமிழ் மக்களுக்குச் சொந்தமான 617 ஏக்கர் நிலத்தை இலங்கை கடற்படையினரின் அபகரிக்க முயற்சி!

sl news f sl news.1 sl news

முள்ளிவாய்க்கால் கிழக்கில் கடற்படையினரின் தேவைகளுக்காக தமிழ் மக்களுக்குச் சொந்தமான சுமார் 617 ஏக்கர் நிலத்தை சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சுவீகரிப்பதற்கு ஏதுவாக இந்நிலங்கள் 03.08.2016 இப்பகுதியில் நில அளவீடு இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் எக்காரணம் கொண்டும் தங்களுக்குச் சொந்தமான நிலங்களை கடற்படையினருக்கு சுவீகரிக்க அனுமதிக்கப்போவதில்லை என மக்கள் உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.

நல்லாட்சி என்ற போர்வைக்குள் இருந்துகொண்டு படையினரின் தேவைக்காக இந்த அரசு எங்கள் நிலங்களைத் தொடர்ந்து அபகரிப்பதை சகித்துக் கொள்ள முடியாது எனவும் அவர்கள் கூறினர்.

எங்கள் நிலங்களை அளவீடு செய்யமுற்பட்டால் கடுமையாகப் போராடி அதனைத் தடுத்து நிறுத்துவோம்.

நில அபகரிப்பை தடுக்க முடியாத தமிழ் அரசியல்வாதிகளின் உருவ பொம்மைகளையும் எரித்து எதிர்ப்பை காட்டுவோம் எனவும் அவர்கள் ஆவசமாகத் தெரிவித்தனர்.

முள்ளிவாய்க்கால் கிழக்கில் தமிழ் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் நிலத்தில் போருக்கு பின்னர் கடற்படை முகாம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த நிலங்களை நிரந்தரமாகச் சுவீகரிக்க தொடர்ந்து முயற்சி இடம்பெற்று வருகிறது.

-வினித்.