இன்றைய இந்திய குடியரசு தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான பிரணாப் முகர்ஜியுடன், தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பழனிமாணிக்கம். (File Photo)
முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துடன், தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பழனிமாணிக்கம். (File Photo)
கேரள மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தையே புரட்டிப் போட்ட சோலார் பேனல் மோசடி வழக்கில், தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பழனிமாணிக்கத்துக்கு தொடர்பு இருப்பதாக சரிதா நாயர் குற்றம் சாட்டியுள்ளார்.
மோசடி வழக்கிற்காக இன்று கோவை நீதிமன்றம் வந்த சரிதா நாயர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, பழனிமாணிக்கத்துக்கு எதிரான ஆதாரத்தை சோலார் கமிஷனிடம் ஒப்படைத்துள்ளேன். முறைகேட்டில் சிக்கிய அரசியல்வாதிகள் 9 பேருக்கு எதிராக ஆதாரம் உள்ளது.
சோலார் பேனல் முறைகேட்டு வழக்கில் கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி முக்கியக் குற்றவாளி என்று கூறினார்.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
