தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ஏற்காடு மிகவும் குறிப்பிடதக்க சுற்றுலா தலமாகும். இங்குள்ள சுற்றலா தலங்களை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் தினசரி வந்து செல்கின்றனர். இங்குள்ள சுற்றுலா தலங்களில் மக்களை மிகவும் ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் உண்டாக்கும் இடம் வனதுறையின் கட்டுப்பாட்டில் உள்ள மான் பூங்கா ஆகும்.
ஏனெனில் மான் பூங்காவானது படகு இல்ல ஏரிக்கு நடுவில் ஒரு தீவு போல உள்ளது. இந்த பூங்காவிற்கு ஏரியின் மீது அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் மீது நடந்து செல்வதே ஒரு தனி அனுபவத்தை ஏற்படுத்தும்.
மான் பூங்காவில் வன துறையினரே பணியமர்த்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மான் பூங்காவில் உள்ளே செல்ல சிறியவர்களுக்கு 5 ரூபாயும், பெரியவர்களுக்கு 10 ரூபாயும், கேமராக்களை எடுத்த செல்வதற்கென தனி கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
மான் பூங்காவில் மான்கள், மயில்கள், வாத்து, முயல், வெள்ளெலிகள் உள்ளிட்ட விலங்குகள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்கிறது. மேலும், இங்கு சிறார்கள் விளையாடுவதற்கு உள்ள தளவாட பொருட்கள் உள்ளது.
ஆனால், இவற்றில் பல பொருட்கள் மிகவும் சேதமடைந்த நிலையில் இருப்பதான் மிகவும் வேதனையான விஷயமாக உள்ளது. அது மட்டும் இன்றி குழந்தைகளை கவர்ந்திழுக்க கூடிய யானை, டைனோசர், கரடி, ஒட்டக சிவிங்கி, கங்காரு உள்ளிட்ட சிற்பங்கள் மீது சிறுவர்கள் ஏறி விளையாடுவர். இந்த சிற்பங்கள் உடைந்த நிலையில் அதனுள் உள்ள இரும்பு கம்பிகள் வெளியில் நீட்டியபடி இருப்பதால் குழந்தைகளை காயப்படுத்திவிடுகிறது.
அது மட்டுமின்றி இந்த பூங்காவானது ஏரிக்கு நடுவில் இருப்பது மட்டுமின்றி, அசுத்துமாக, புதர்கள் நிறைந்து காணப்படுவதால் பாம்புகள் அதிகளவில் உலாவுகின்றன. இதனால் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் பயத்தில் மிரண்டு ஓடுகின்றனர்.
எனவே, இந்த பூங்காவை விரைவில் சீரமைக்க வேண்டும். இல்லையெனியில் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறையும்.
-நவீன் குமார்.
