இந்தியா விண்வெளிப் பொருளாதாரத்தில் வளர்ந்து வருகிறது என்று ஜி-20 கூட்டத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்

இந்தியா விண்வெளிப் பொருளாதாரத்தில்  வளர்ந்து வருகிறது என்று ஜி-20 விண்வெளிப் பொருளாதாரத் தலைவர்கள் கூட்டத்தின் தொடக்க அமர்வில் உரையாற்றிய மத்திய அறிவியல்,  தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை  இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். 

இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவத்தின் கீழ், ஜி-20 விண்வெளிப் பொருளாதாரத் தலைவர்கள் கூட்டத்திற்கு மத்திய அரசின் விண்வெளித்துறை ஏற்பாடு செய்திருந்தது.

விண்வெளியில் தொடக்கம் முதல் இறுதி வரையிலான திறனைக் கட்டமைத்துள்ள மிகச் சில நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது என்று அமைச்சர் கூறினார். கடந்த சில
ஆண்டுகளாக விண்வெளித் தொழில்நுட்பம் வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும், பரவியுள்ளது. இதன் பயனாக விண்வெளி அடிப்படையிலான சேவைகளுக்கு பெரும் தேவை ஏற்பட்டுள்ளது.  இதனால் பெருமளவு வணிகத்திறனை இது கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.

இஸ்ரோவுடன் கைகோர்த்து தொடக்கம் முதல் இறுதி வரையிலான விண்வெளி செயல்பாடுகளில் 2020 விண்வெளித்துறை சீர்திருத்தங்கள் மூலம்  இந்திய தனியார் தொழில்துறை ஈடுபட பிரதமர் திரு நரேந்திர மோடி அரசு முடிவு செய்ததாக டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

தனியார் முதலீடுகளுக்கு மேலும் ஊக்கம் அளிப்பதற்காக விண்வெளிச் செயல்பாடுகளின் அனைத்துப் பிரிவுகளிலும் தனியார் பங்கேற்பை ஊக்கப்படுத்தி  விரிவாக்கும் இந்தியாவின் விண்வெளிக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதை அமைச்சர் நினைவு கூர்ந்தார்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஜி-20 நாடுகள் மற்றும் விருந்தினர் நாடுகளின் விண்வெளித் தொழில்துறையினருக்கும் தேசிய விண்வெளி முகமைகளின் தலைவர்களுக்கும் தூதரக அதிகாரிகளுக்கும் டாக்டர் ஜிதேந்திர சிங் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply