ஊடகம் என்பது வெறும் காட்சிக்கூடமோ அல்லது தகவல்களைப் பகிரும் கருவி மட்டும் அல்ல. மக்களின் நம்பிக்கைகளை வடிவமைக்கும் செயல்முறையின் முக்கிய அங்கம் ஊடகம். மக்களின் உணர்வுகளுக்கு வடிவம் கொடுப்பதில் தகவல் தொடர்புத் துறையில் உள்ளவர்களுக்கு பொறுப்பு உண்டு என்று தெரிவிக்பட்டுள்ளது.
தெற்காசிய புலம்பெயர்ந்தோர் மாநாட்டின் இறுதி நாளான நேற்று (23.11.2013) ‘ஊடகம், கலைகளில் தெற்காசிய பிரதிநிதித்துவம்’ எனும் தலைப்பில் கலந்துரையாடல் நடை பெற்றது.
‘ஸ்ட்ராடெஜிக் மூவ்ஸ்’ நிர்வாக இயக்குநர் விஸ்வா சதாசிவன், இந்தியாவின் புகழ்பெற்ற நடனக் கலைஞரும், தர்பனா கலைப் பயிலகத்தின் இயக்குநருமான டாக்டர் மல்லிகா சாராபாய், ‘மின்ட்’ ‘மின்ட் ஏசியா’ பத்திரிகையின் பொறுப்பாசிரியர் சுகுமார் ரங்கநாதன் ஆகியோர் அரங்கில் பங்கேற்று தெற்காசிய புலம்பெயர்ந்தோர் சமூகத்தைப் பிரதிநிதிப்பதில் ஊடகங்கள், கலைகளின் பங்கு, எதிர்கொள்ளும் சவால்கள் ஆகியவை குறித்து கருத்து தெரிவித்தனர்.