திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள பொன்மலைபட்டியில் ‘அன்பில் அறகட்டளை’ சார்பில் நடைப்பெற்ற இலவச வேலைவாய்ப்பு முகாமை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
இளைஞர்களின் வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் ஆண்டுதோறும் ‘அன்பில் அறகட்டளை’ சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அதுப்போல் இந்தாண்டு இன்று பொன்மலைப்பட்டியில் உள்ள திரு இருதய மேல்நிலைப் பள்ளியில் வேலைவாய்பு முகாம் நடைப்பெற்றது.
இந்த முகாமை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் மகேஷ் பொய்யமொழி தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.
கடந்த 2016 ஆண்டு இதுபோல் காட்டூர் உருமுதனலெட்சுமி கல்லூரியில் நடந்த முகாமில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை கிடைத்தது. தற்போது நடக்கும் முகாமில் கலந்துகொள்பவர்களுக்கும் வேலை கிடைத்து பயன் பெற வாழ்த்துகின்றேன்.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் சென்னை, மதுரை, வேலூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்குபெற்றுள்ளன. இந்த வேலை வாய்ப்பு முகாம் திருவெறும்பூர் தொகுதி மக்களுக்கு மட்டுமல்லாது சுற்று வட்டப் பகுதி பொதுமக்களும் பயனடைய தான். எனவே, இதில் 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை கலந்துகொண்டு வேலைவாய்ப்பு பெற்று பயனடைய வேண்டும் என்றார்.
இந்த முகாமில் படித்த இளைஞர்களும், இளம்பெண்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, அவரது சகோதரி உஷாராணி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.
-ஆர்.சிராசுதீன்.