ஊழல் மற்றும் நிதி மோசடி வழக்கில் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக நேரில் ஆஜராகி வாக்கு மூலம்!

pci

mahinda rajapatcha

rupavahiniஇலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது, கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இலங்கை ரூபவாஹினி ஒளிபரப்பு கூட்டு ஸ்தாபனத்தில் விளம்பரங்கள் ஒளிபரப்பியதில் ஊழல் மற்றும் நிதி மோசடிகள் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவ்வழக்கை இலங்கை ஜனாதிபதி ஆணைக்குழு நேரடியாக கண்காணித்து வருகிறது.

இந்நிலையில், ஊழல் மற்றும் நிதி மோசடிகள் தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு மஹிந்த ராஜபக்ஷவுக்கு இலங்கை ஜனாதிபதி ஆணைக்குழு பலமுறை அழைப்பாணை (Summons) அனுப்பியது. ஆனால், விசாரணைக்கு ஆஜராகாமல் மஹிந்த ராஜபக்ஷ டிமிக்கி கொடுத்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 16.03.2017 அன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேரில் ஆஜராகுமாறு மஹிந்த ராஜபக்ஷவுக்கு மீண்டும் அழைப்பாணை (Summons) அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அன்றும் அவர் விசாரணைக்கு வரவில்லை.

இந்நிலையில், பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக மஹிந்த ராஜபக்ஷ இன்று (24.03.2017) நேரில் ஆஜராகி வாக்கு மூலம் அளித்துள்ளார்.

-வினித்.