உள்ளாட்சி தேர்தல் ரத்து மேலும் 4 வாரங்களுக்கு தொடரும்!

Chennai high court

உள்ளாட்சி தேர்தலில், எஸ்.டி. பிரிவினருக்கு போதிய இடஒதுக்கீடு வழங்கவில்லை என்று கூறி தி.மு.. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.  இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு  தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து கடந்த 4–ந் தேதி தீர்ப்பு வழங்கியது

இதை எதிர்த்து, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து தனி நீதிபதி அளித்த தீர்ப்புக்கு தடைவிதிக்க மறுப்பு தெரிவித்தது. மேலும், வழக்கின் அடுத்த விசாரணை வரும் 18- ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்தது

அதன்படி இன்று இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்ட உத்தரவுக்கு தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துவிட்டது. மேலும், வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்த ஐகோர்ட்டு தமிழக அரசு மற்றும் திமுக பதிலளிக்க வேண்டும் என்று கோரி நோட்டீஸ் அனுப்பியது. சென்னை ஐகோர்ட்டின் உத்தரவு மூலம் உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டது மேலும் 4 வாரங்களுக்கு தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது

-ஆர்.அருண்கேசவன்.