கனமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் வெள்ளம்! -இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

ka state b ka state f ka state.1 ka state.2 ka state

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பெங்களூரு, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட பகுதிகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. ஏமலூர், பெல்லாந்தூர் ஏரிகள் நிரம்பி வழிகின்றன.

மைசூரு, மாண்டியா, அத்திபேலே, பெங்களூரு புறநகர் பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. பெங்களூரு கெங்கேரி , பாபுஜிநகர், பிலேகாஹள்ளி, சிவாஜிநகர், பழைய விமான நிலைய ரோடு, மைசூர் ரோடுநாயந்தா ஹல்லி, சிட்டி மார்க்கெட், வனசங்கரி, எஸ்.எஸ்ஆர் லேவட், பில்போடு உள்பட நகரின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

நாயந்தஹல்லி பகுதியில் கால்வாய் உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. ஓசூர் ரோட்டில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தன்னரகட்டா, கோடி சிக்கன ஹல்லி பகுதி பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.

காவல்துறை, தீயைணைப்பு படையினர், தேசிய பேரிடர் குழுவினர் படகு மூலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வருகின்றனர். தண்ணீர் பாட்டல்கள், பால், உணவு பொருட்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

 – எஸ்.சதிஸ்சர்மா.