தமிழகத்தின் அம்மா உணவகம்; ஆந்திராவில் அண்ணா உணவகமானது.  

anna-canteen1anna-canteen

அண்மையில் தெலுங்கு தேசம் கட்சியின் மாநாடு திருப்பதியில் நடந்த போது அதில் பங்கேற்று முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசிய போது, “தமிழகத்தில் ஏழைகளுக்கு மலிவு விலையில் உணவு வழங்கும் வகையில்அம்மா உணவகங்கள்” செயல்பட்டு வருகின்றன. அது போல் நமது ஆந்திராவிலும் ஏழைகளுக்கு மலிவு விலையில் உணவு வழங்கும் வகையில் அண்ணா உணவகங்கள் திறக்கப்படும். கடந்த ஆண்டே இந்த திட்டத்துக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கிவிட்டது. எனவே, இந்த  ஆண்டு இத்திட்டத்தை கட்டாயம் அமல்படுத்துவோம் என்று அறிவித்திருந்தார். அதன்படி ஆந்திர மாநிலத்தின் தற்காலிக தலைமை செயலகம் அமைந்துள்ள பகுதியில்அண்ணா என்.டி.ஆர். உணவகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தை ஆந்திரா மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார். அப்போது அந்த உணவகத்தை பார்வையிட்ட அவர் இட்லி, பொங்கலை வாங்கி ருசி பார்த்தார்.

தற்போது ஒரு அண்ணா என்.டி.ஆர் உணவகம் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் மங்களகிரி, துளூர், உள்ளிட்ட 29 கிராமங்களில் அண்ணா உணவகங்கள் தொடங்கப்படும்என்றார்

அண்ணா என்.டி.ஆர் உணவகத்தில் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி விற்கப்படுகிறது. 200 கிராம் அளவுள்ள பொங்கல் ரூ.5-க்கு கிடைக்கிறது. அதே அளவு உள்ள தக்காளி சாதம், சாம்பார் சாதம், புளியோதரை சாதம், காய்கறி சாதம் ரூ.5-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 150 கிராம் உள்ள தயிர் சாதம் 3 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.

தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டஅம்மா உணவகம்” மற்ற மாநிலங்களும் பின்பற்றும் அளவிற்கு முன் மாதிரி திட்டமாகத் திகழ்கிறது.

-ஆர்.மார்ஷல்.