இந்தியாவின் அணுசக்தித் திட்டம் போருக்காக அல்ல எனவும், அமைதியான நோக்கங்களுக்காகவே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய அணுசக்தித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். நாட்டின் அணுசக்திப் பயணம் தொடங்கியதிலிருந்தே இதுதான் வழிகாட்டி என்று அவர் தெரிவித்துள்ளார்.
புளூம்பெர்க் பொருளாதார மன்றம் 2026-ன் ஒரு பகுதியாக நடைபெற்ற பிரத்யேக உரையாடலில் பங்கேற்ற அவர், இந்தியாவின் எதிர்கால எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அணுசக்தி முக்கியப் பங்கு வகிக்கும் என்று கூறினார். இந்தியாவின் அணுசக்தித் திட்டத்தின் சிற்பியான டாக்டர் ஹோமி பாபாவின் தொலைநோக்குப் பார்வையை நினைவு கூர்ந்த டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தியா அணுசக்தியை அமைதியான பயன்பாடுகளுக்கும் தேசிய வளர்ச்சிக்கும் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகக் கூறினார்.
2047-ம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் அணுசக்தித் திறனையும், 2070-ம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வையும் நாடு இலக்காகக் கொண்டுள்ள நிலையில், அணுசக்தியானது தொடர்ச்சியான, நம்பகமான தூய்மையான மின்சார விநியோகத்தை வழங்குவதன் மூலம் மற்ற மின் மூலங்களுக்குத் துணையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று மத்திய அணுசக்தித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
எம்.பிரபாகரன்
