தமிழ் நாட்டின் நெல் களஞ்சியமாக விளங்கும் நெஞ்சை அள்ளும், தஞ்சை மாவட்டத்தில், கோடை வெப்பம் கொளுந்து விட்டு அடித்தாலும், பெய்த கோடை மழையின் ஈரப்பதத்தைப் பயன்படுத்தி, கோடைக்கால உளுந்து சாகுபடியில் விவசாயிகள் ஆர்வமுடன் ஈடுப்பட்டுள்ளனர்.
நெல் சாகுபடியை விட, உளுந்து சாகுபடியில் பராமரிப்பும், அறுவடை செலவும் குறைவு என்பதால், இது லாபகரமான பணப்பயிர்தான் என்கின்றனர் விவசாயிகள்.
வழக்கமாக கோடைக்காலத்தில் எள் சாகுபடியில் தான் விவசாயிகள் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், எள் செடியிலிருந்து எள்ளை பிரித்து எடுப்பதற்குள் போதும், போதும் என்றாகி விடுகிறது. அதற்கு வேலையாட்களும் கிடைப்பதில்லை. அதனால்தான் உளுந்து சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
-எஸ்.ராஜேந்திரன்.