விஜயவாடா மற்றும் விசாகப்பட்டினம் இடையே ஜூன் 1 முதல் விமான சேவை மீண்டும் தொடங்கப்படும் என்று மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு அறிவித்துள்ளார்.

விஜயவாடா மற்றும் விசாகப்பட்டினம் இடையே காலை வேளையில் விமான சேவை 2025 ஜூன் 1 தேதி தொடங்கப்படும் என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு.ராம் மோகன் நாயுடு இன்று அறிவித்தார். இந்தப் பாதை ஆந்திரப் பிரதேசத்திற்குள் விமான சேவை இணைப்பை மேம்படுத்தும் மற்றும் விஜயவாடாவை மாநிலத்தின் நிதி மையமான விசாகப்பட்டினத்துடன் இணைக்கும்.

புதிதாக திருத்தப்பட்ட விமான சேவை அட்டவணை, அடிக்கடி பயணிப்பவர்களுக்கு அதிக வசதியை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. காலையில் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் இயக்கும் விமானம், விஜயவாடாவிலிருந்து காலை 7:15 மணிக்குப் புறப்பட்டு 8:25 மணிக்கு விசாகப்பட்டினத்தை அடையும். மறுமார்க்கத்தில் காலை 8:45 மணிக்கு விசாகப்பட்டினத்தில் இருந்து புறப்படும் விமானம், காலை 9:50 மணிக்கு விஜயவாடாவை வந்தடையும்.

இந்த சேவை மேம்பாடு குறித்துப் பேசிய அமைச்சர் திரு ராம் மோகன் நாயுடு, மண்டலங்கள் இணைப்பானது உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் பயணத்தை எளிமையாக்கும் அரசின் தொலைநோக்குப் பார்வையின் ஒரு நடவடிக்கையாகும் என தெரிவித்தார்.

விஜயவாடா மற்றும் விசாகப்பட்டினம் இடையேயான இந்த முக்கிய விமான சேவையை மீண்டும் வழங்குவது பயணிகளுக்கு கணிசமாக பயனளிக்கும் என்றும் இது இரு நகரங்களுக்கிடையில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதோடு ஆந்திராவின் பரந்த வளர்ச்சி இலக்குகளை அடைய உதவும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Leave a Reply