வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கான ஏற்றுமதி வளர்ச்சி உத்தியை வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஆணையம் பரிசீலனை.

இந்திய வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களுக்கான தளவாடத் தடைகளைக் குறைப்பதற்கும் சந்தை அணுகலை மேம்படுத்துவதற்கும்  அரசு உறுதிபூண்டுள்ளது. புது தில்லியில் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஆணையம்  ஏற்பாடு செய்த உயர்மட்ட சிந்தனைத் திருவிழாவில் உரையாற்றிய வணிகத் துறை செயலாளர் திரு சுனில் பர்த்வால் இதைத் தெரிவித்தார்.

“விவசாய ஏற்றுமதியில் புதுமை மற்றும் நிலைத்தன்மைக்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஒரு முக்கிய மையமாக இருக்க கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் பல்துறை ஆலோசனைகளின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்” என்று திரு பர்த்வால் வலியுறுத்தினார். விவசாய உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறன் இரண்டும் காலத்தின் தேவை என்று அவர் கூறினார். அமர்வுகளின் போது விவாதிக்கப்பட்ட யோசனைகள் மற்றும் உத்திகள் குறித்து மேலும் ஆலோசிப்பது பற்றிய அமைச்சகத்தின் அர்ப்பணிப்பை  அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இந்தியாவில் இருந்து வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான உத்திகள் குறித்து ஆலோசிக்க மத்திய அரசு, மத்திய அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள், மாநில அரசுகளின் பிரதிநிதிகள், கொள்கை வல்லுநர்கள், வேளாண் வர்த்தகம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுத் துறையைச் சேர்ந்த தொழில் தலைவர்கள் ஆகியோரை இந்த ஆலோசனை உரையாடல் ஒன்றிணைத்தது.

சிந்தனை அமர்வின்  தொடக்க அமர்விற்கு வணிகத் துறை செயலாளர் திரு சுனில் பர்த்வால் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தின்  செயலாளர் திரு சுப்ரதா குப்தா ஆகியோர் தலைமை தாங்கினர். இந்த அமர்வில் வணிகத் துறை சிறப்பு செயலாளர்திரு  ராஜேஷ் அகர்வால், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை கூடுதல் செயலாளர் திருமதி வர்ஷா ஜோஷி மற்றும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்கள் கலந்து கொண்டனர்.

உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தின்  செயலாளர் திரு சுப்ரதா குப்தா தனது தொடக்க உரையில், நிலையான ஏற்றுமதி வளர்ச்சியை உறுதி செய்வதற்கு உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மதிப்பு கூட்டலின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். சர்வதேச விதிமுறைகள், கட்டணத் திட்டங்கள் மற்றும் மத்திய அரசு, மாநில அரசு, பல்வேறு துறைகள் மற்றும் தொழில்துறை பங்குதாரர்களிடையே அதிக ஒருங்கிணைப்புடன் உள்கட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் தாவர சுகாதார தரநிலைகளை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று அவர் வலியுறுத்தினார். பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதிக்கான முக்கிய சாத்தியமான தயாரிப்புகள் மற்றும் துறைகளை அவர் அடையாளம் கண்டார்.

இந்தியாவின் வேளாண் ஏற்றுமதி திறனை உணர்ந்து கொள்வதில் மத்திய அரசு, மாநில அரசு, தொழில்துறை பங்குதாரர்கள் மற்றும் விவசாய சமூகங்களிடையே ஒருங்கிணைந்த முயற்சிகளின் முக்கிய பங்கை வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளர் திரு ராஜேஷ் அகர்வால் வலியுறுத்தினார். புதிய விவசாயம், பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை புதிய புவியியல் பகுதிகளுக்கு எடுத்துச் செல்ல பல்வேறு பங்குதாரர்களிடையே மிகவும் ஒருங்கிணைந்த அணுகுமுறை இருக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

இந்த சிந்தனை அமர்வு , வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்,  ஆணையம் ஆகியவற்றால் மத்திய அரசு, மாநில அரசுகள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் துணை அமைச்சகங்களைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட பங்குதாரர்களுடன் நடத்தப்படும் முதல், ஒரே மாதிரியான கூட்டு உரையாடலாகும். ஆந்திரா, பீகார், சத்தீஸ்கர், குஜராத், ஹரியானா, பஞ்சாப், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, தமிழ்நாடு, உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் என நாடு முழுவதும் இருந்து 14 மாநிலங்கள் தொடக்க அமர்வில் பங்கேற்றன. வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுத் துறையைச் சேர்ந்த பல தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்த உரையாடலில் பங்கேற்றனர்.

குறிப்பிட்ட வேளாண்-வர்த்தகப் பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுத் துறையை மையமாகக் கொண்ட ஐந்து இணையான தொழில்நுட்ப முன்னறிவிப்பு அமர்வுகளும் நடைபெற்றன.

Leave a Reply