சிங்கப்பூர் தேர்தலில் வெற்றி பெற்ற திரு லாரன்ஸ் வோங்கிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையே மக்களுக்கு இடையிலான நெருக்கமான உறவுகளுடன் வலுவான, பன்முக ஒத்துழைப்பு உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“பொதுத் தேர்தல்களில் லாரன்ஸ் வோங்கின் (@LawrenceWongST) மகத்தான வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்தியாவும் சிங்கப்பூரும் மக்களுக்கு இடையே நெருங்கிய உறவுகளுடன் வலுவான பன்முக ஒத்துழைப்பைப் பகிர்ந்து கொள்கின்றன. நமது விரிவான உத்திசார் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த உங்களுடன் தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்றுவதை நான் எதிர்நோக்கியுள்ளேன்.”
எம்.பிரபாகரன்