நடிப்புக் கலை’ பற்றிய தமது கருத்துக்களை முன்னணி நடிகரும் படைப்பாயியுமான ஆமிர் கான் வேவ்ஸ் உச்சி மாநாட்டில் பகிர்ந்து கொண்டார்.

முன்னணி நடிகரான ஆமிர் கான், இன்று (03.05.2025) வேவ்ஸ் உச்சி மாநாட்டில் ‘நடிப்புக் கலை’ பற்றி தமது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். திரைப்படத் துறையில் தனது பல வருட அனுபவத்திலிருந்து பெற்ற பல விஷயங்களை அவர் பகிர்ந்துகொண்டார். தாம் ஒரு பயிற்சி பெற்ற நடிகர் அல்ல என கூறிய அவர் தாம் தேசிய நாடகப் பள்ளிக்குச் செல்ல விரும்பியதாகவும் ஆனால் அது முடியாமல் போய்விட்டது என்றும் பயிற்சியின்றி அனுபவத்தின் மூலமே தான் நடிக்க வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

திரைப்படத் துறையின் எதிர்காலம் குறித்து ஆமிர் கான் கூறுகையில், செயற்கை நுண்ணறிவும் பிற தொழில்நுட்பங்களும், பல முன்னேற்றங்களைக் கொண்டு வந்துள்ளன என்றார். ஒரு நடிகரின் முதல் பணி, கதாபாத்திரத்தை தமது மனதில் பதிய வைத்துக் கொண்டு அதில் ஒன்றி நடிப்பது என அவர் கூறினார். அர்ப்பணிப்புடனும் நேர்மையாகவும் பணியாற்றும்போது சிறப்பாக நடிக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

திரைப்படத்திற்கும் கதைக்கும் தேவையானதைச் செய்ய வேண்டும் எனவும், அதில் உங்கள் சொந்தக் கருத்துகளைத் திணிக்க கூடாது என்றும் நடிகர் ஆமிர் கான் கூறினார். மத்திய தகவல் ஒலிபரப்புத் துறைச் செயலாளர் சஞ்சய் ஜாஜுவால், ஆமிர் கானுக்குப் பாராட்டுத் தெரிவித்து அவரை கௌரவித்தார்.

Leave a Reply