மாறிவரும் ஆட்சி அமைப்பைக் கருத்தில் கொண்டு உகந்த பாடத்திட்டம் தேவை என்று டாக்டர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தியுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களால் உந்தப்பட்டு  விரைவாக மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பொதுமக்கள் நிர்வாகப் பயிற்சி தொகுப்பில் தொடர்ச்சியான  பரிணாம வளர்ச்சி மற்றும் ஆட்சி முறையின் மாற்றத்துக்கு ஏற்ப பாடதிட்டம்  தேவை என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று தெரிவித்துள்ளார்.

இந்திய பொது நிர்வாகக் கல்வி நிறுவனத்தின் 50 வது “பொது நிர்வாகத்தில் மேம்பட்ட தொழில்முறை திட்டம்” பயிற்சி நிறைவு பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய இந்திய பொது நிர்வாக கல்வி நிறுவனத்தின் நிர்வாகக் குழுவின் தலைவரான டாக்டர் ஜிதேந்திர சிங், “இன்றைய பொருத்தமான அம்சம் நாளை இல்லாமல் போய்விடவும் வாய்ப்பு உண்டு. எனவே, பொருத்தமானதாக அமைய நாள்தோறும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

தற்சார்பு இந்தியா மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் போன்ற கருப்பொருள்களை ஒருங்கிணைத்து, நாளடைவில் பாடத்திட்டம்  உருவாகியுள்ளது என்பதில் தாம் மகிழ்ச்சியடைவதாக அவர் கூறினார்.

அதிவேக தொழில்நுட்ப முன்னேற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் தொடர்ச்சியான கற்றல் மற்றும் தகவமைப்பு கொள்கைகளை வகுப்பதன் அவசியத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார்.

Leave a Reply