ராஜஸ்தானின் மின்துறை நிலவரம் குறித்து மத்திய அமைச்சர் மனோகர் லால் ஜெய்ப்பூரில் ஆய்வு செய்தார்.

மத்திய மின்சாரம், வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாடு அமைச்சர் திரு மனோகர் லால், ராஜஸ்தானின் மின்துறை நிலவரம் குறித்து ஜெய்ப்பூரில் இன்று ஆய்வு செய்தார். இக்கூட்டத்தில் ராஜஸ்தான் முதலமைச்சர் கலந்து கொண்டார். மாநில அரசு, மத்திய எரிசக்தி அமைச்சகம், மத்திய அரசின் பொதுத்துறை அதிகாரிகள் மற்றும் மின்துறை உயர் அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.

மாநிலத்தின் மின்துறை நிலவரம் குறித்த சுருக்கமான கண்ணோட்டத்தை முன்வைக்கும் விளக்கக் காட்சியுடன் கூட்டம் தொடங்கியது. செயல் விளக்கத்தின்போது, மாநில எரிசக்தித் துறையின் சாதனைகள் எடுத்துரைக்கப்பட்டன. மேலும், முக்கிய சவால்கள் மற்றும் சாத்தியமான தீர்வுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

அப்போது உரையாற்றிய அமைச்சர் திரு மனோகர் லால், மாநிலத்தின் மின்சாரத் துறையில் உள்ள பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதிலும், அவற்றைத் தீர்ப்பதிலும் தனது பயணம் முக்கியமானதாக இருக்கும் என்று குறிப்பிட்டார். மின் உற்பத்தி, மின் பகிர்மானம் ஆகிய துறைகளில் உள்கட்டமைப்பு திட்டமிடலில் மாநில எரிசக்தித் துறையின் முயற்சிகளை அவர் பாராட்டினார்.

Leave a Reply