இந்தியாவுக்கும் மொரீஷியஸுக்கும் இடையேயான நீடித்த உறவை வலுப்படுத்தும் வகையில், இந்தியப் பெருங்கடலில் ஐஓஎஸ் சாகர் மொரீஷியஸில் உள்ள போர்ட் லூயிஸில் ஏப்ரல் 26 முதல் 28 வரை துறைமுகப் பயணத்தை மேற்கொண்டது.
அப்போது கப்பலின் கட்டளை அதிகாரி மொரீஷியஸ் கடலோர காவல்படையின் கமாண்டண்டை சந்தித்து, இருநாட்டு கடற் படைகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான கடப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்கள். மொரீஷியஸ் காவல் படையின் சிறப்புப் படை, கடல்சார் விமானப் படை, கடலோர காவல்படை பயிற்சிப் பள்ளி மற்றும் காவல்துறை ஹெலிகாப்டர் ஆகிய பல்வேறு முக்கிய பயிற்சி வசதிகளை பன்னாட்டு குழுவினர் பார்வையிட்டு சக வீரர்களுடன் கலந்துரையாடினர். கடல்சார் பாதுகாப்பில் பரஸ்பர ஆர்வமுள்ள துறைகள் குறித்து விவாதிப்பதற்கும், அறிவு மற்றும் அனுபவங்களை பரிமாறிக் கொள்வதற்கும் இந்தப் பயணம் ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கியது.
எஸ்.சதிஸ் சர்மா