இந்தியா-அமெரிக்க இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்த தற்போதைய விவாதங்களின் ஒரு பகுதியாக, இந்தியாவின் வர்த்தகத் துறையின் பிரதிநிதிகள் மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தின் பிரதிநிதிகள் 2025 ஏப்ரல் 23-25 வரை வாஷிங்டனில் சந்தித்தனர். முன்னதாக புதுதில்லியில் 2025 மார்ச் மாதம் நடைபெற்ற இருதரப்பு விவாதங்களைத் தொடர்ந்து அடுத்ததாக இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
வாஷிங்டனில் நடந்த கூட்டங்களின் போது, வரிவிதிப்பு மற்றும் வரி அல்லாத விஷயங்களை உள்ளடக்கிய பல விஷயங்கள் பற்றி குழு பயனுள்ள விவாதங்களை நடத்தியது. ஆரம்பகால பரஸ்பர வெற்றிகளுக்கான வாய்ப்புகள் உட்பட, பரஸ்பர நன்மை பயக்கும், பல துறை இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் தவணையை 2025-ம் ஆண்டுக்குள் நிறைவு செய்வதற்கான பாதை குறித்து குழு விவாதித்தது. மெய்நிகர் சந்திப்பு மூலம் பயனுள்ள துறை வல்லுநர்கள் நிலையில் பேச்சுக்கள் நடந்துள்ளன. மே மாத இறுதியில் இருந்து துறைசார் நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன.
இந்தியா-அமெரிக்கா உறவை விரிவுபடுத்தவும், 2025 பிப்ரவரியில் தலைவர்கள் வெளியிட்ட அறிக்கைக்கு ஏற்ப இருதரப்பு முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெறும். இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் பொருளாதார உறவுகள் மற்றும் விநியோகச் சங்கிலி ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதே இந்தப் பேச்சு வார்த்தைகளின் நோக்கமாகும்.
எம்.பிரபாகரன்