நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் இலங்கை கடற்படையினர்!

sln7sln8sln11sln2sln3sln.6 sln sln10sln1sln5sln9

இலங்கையில் உள்ள ஏரி, குளம், கால்வாய் மற்றும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி சுத்தப்படுத்தும் பணியில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இலங்கையின் வடமத்திய மாகாணத்தின் தலைநகரான அனுராதபுரத்தில் உள்ள ஏரியில் உள்ள மரம், செடி, கொடிகளை அகற்றி சுத்தப்படுத்தி வருகின்றனர்.

வடமத்திய மாகாணத்தின் தலைநகரான அனுராதபுரத்தைச் சுற்றி 5 பெரிய நீர்ப்பாசன ஏரி, குளங்கள் இருக்கின்றன. இக்குளங்கள் மக்களின் குடிநீர் தேவைகளுக்காகவும், விவசாயம் செய்வதற்காகவும் அந்த காலம் முதலே பயன்பாட்டில் இருந்து வந்தன. சுமார் 2,500 ஆண்டுகளுக்குப் பின்னரும் இந்நீர்நிலைகள் தற்போதும் பயன்பாட்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

-என்.வசந்த ராகவன்.