குறைந்த செலவில் குழந்தைகள் தத்தெடுப்பதற்கான வழிமுறைகள்!

Breast

குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் குழந்தைகளை தத்தெடுப்பதற்கான சட்டப்பூர்வமான வழிமுறைகள் தெரியாமல், தரகர்களிடமோ அல்லது மோசடி பேர்வழிகளிடமோ சிக்கி சட்ட விரோதமான முறையில் அதிகம் பணம் கொடுத்து குழந்தைகளை விலைக்கு வாங்க முயற்சிக்கின்றனர்.

இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் மற்றும் பொது இடங்களிலும் பச்சிளம் குழந்தைகள் திருட்டு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

இதன் மூலம் குழந்தை இல்லாத தம்பதிகள் பெருமளவில் பணத்தை இழப்பதோடு மட்டுமில்லாமல், அவமானத்தையும் சந்திக்கவேண்டிய அவல நிலைக்கு ஆளாகின்றனர்.

இதுப்போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுப்பட வேண்டுமானால், சட்டப்பூர்வமான முறையில் குழந்தைகளை தத்தெடுக்க வேண்டும்.

அதற்காகதான் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் “மத்திய தத்தெடுப்பு வள அதிகாரசபை” செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் மூலம் பதிவு செய்து குழந்தைகளை தத்தெடுத்தால், நீங்கள் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் வாழலாம்.

மத்திய தத்தெடுப்பு வள அதிகார சபை மூலம் குழந்தை தத்தெடுப்புக்கான கட்டண விபரம், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.

C_Users_UTL_Desktop_CARA1 C_Users_UTL_Desktop_CARA2

 -டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com