ஜி.எஸ்.டி.க்கான கருத்தொற்றுமை கூட்டாட்சிக்கான பெரிய கல்வெட்டாக வரலாற்றில் இடம் பெறும்: மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோதி பேச்சு.

??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????cm meeting in delhi.1cm meeting in delhi2

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கில் புதுடெல்லி ராஷ்டிரபதி பவனில் நிதி ஆயோக்கின் 3-வது ஆட்சிமன்ற குழு கூட்டம் பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் இன்று கூடியது.  நிதி ஆயோக்கின் தலைமை அங்கமான இந்த குழு பிரதமர் தலைமையில் அனைத்து முதல் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களை உள்ளடக்கியது ஆகும்.

கூட்டத்தில் பேசிய பிரதமர் பிரதமர் நரேந்திர மோதி, அனைத்து மாநிலங்கள் மற்றும் முதல் அமைச்சர்களின் கூட்டு முயற்சிகளாலேயே புதிய இந்தியாவிற்கான தொலைநோக்கு பார்வை புலப்படும். ஜி.எஸ்.டி.க்கான கருத்தொற்றுமை கூட்டாட்சிக்கான பெரிய கல்வெட்டாக வரலாற்றில் இடம் பெறும்.

ஒரே தேசம், ஒரே நோக்கம், ஒரே தீர்மானம் என்ற உணர்வை ஜி.எஸ்.டி. பிரதிபலிக்கிறது.  அதுபற்றிய விவாதம் மற்றும் ஆலோசனை ஆகியவற்றை அடுத்தடுத்த தேர்தல்களில் முன்னெடுத்து செல்ல வேண்டும். முதலீட்டு செலவினங்கள் மற்றும் உட்கட்டமைப்பு உருவாக்கம் ஆகியவற்றினை துரிதப்படுத்திட வேண்டும்.

இந்த கூட்டத்தில் பல்வேறு மாநில முதல் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல் அமைச்சர்களான பஞ்சாபின் அமரீந்தர் சிங், பீகாரின் நிதீஷ் குமார், திரிபுராவின் மாணிக் சர்கார், கர்நாடகாவின் சித்தராமையா மற்றும் தமிழ்நாட்டின் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஜம்மு மற்றும் காஷ்மீரின் மெஹபூபா முப்தி சயீத், ஒடிசாவின் நவீன் பட்நாயக் மற்றும் உத்தர பிரதேசத்தின் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் மத்திய மந்திரிகள் நிதீன் கட்காரி, ராஜ்நாத் சிங், சுரேஷ் பிரபு, பிரகாஷ் ஜவடேகர், ராவ் இந்தர்ஜித் சிங் மற்றும் ஸ்மிரிதி இரானி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மேற்கு வங்காளத்தின் முதல் மந்திரி மம்தா பானர்ஜி மற்றும் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொள்ள வர முடியவில்லை என தகவல் தெரிவித்துள்ளனர்.

எனினும், டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியாவை பிரதிநிதியாக கெஜ்ரிவால் அனுப்பியுள்ளார்.

-எஸ்.சதிஸ் சர்மா.