தண்ணீர் இல்லாதக் கழிப்பறை! புத்தகம் இல்லாத நூலகம்! -கொளக்கரவாடி ஊராட்சியின் அவலம்.

?????????????????????????????????????????????????????????????? ??????????????????????????????? ??????????????????????????????? ???????????????????????????????

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், கொளக்கரவாடி ஊராட்சியில் பொது கழிவறை திட்டம் மூலம் சுமார் ரூ. 2 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்ட கழிப்பறைகள் செயல்பாட்டிற்கு வரவில்லை. மேலும், ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாக கழிப்பறை உள்ளது. ஆனால், அதில் கழிப்பறைக்கு தேவையான தண்ணீர் இல்லை. 

அதைபோல இவ்ஊராட்சியில் கிராமபுற நூலகம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் பல ஆண்டுகளாக பூட்டியே இருக்கிறது. புத்தகங்கள் நூலகத்தில் இருந்தால் எலிகள் கடித்து சேதப்படுத்துகிறது என்று சொல்லி, அங்கிருந்து புத்தகங்களை அப்புறப்படுத்திவிட்டார்கள்.

உள்ளாட்சி நிர்வாகம் என்பது அதிகாரப் பகிர்வுக்காக உருவாக்கப்பட்டது. ஆனால், அது ஊழல் பகிர்வாக உருமாறிவிட்டது. இதில் தேர்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகளை விட, சம்மந்தப்பட்ட துறைச்சார்ந்த அதிகாரிகள்தான் தனிப்பட்ட முறையில் அதிகம் ஆதாயம் பெற்று வருகின்றனர். இந்தியா முழுவதும் இதுதான் நிலமை.

கிராமங்கள் முன்னேற்றமே, இந்தியாவின் முன்னேற்றம் என்று ஏட்டில் எழுதினால் மட்டும் போதாது. அதை செயல்படுத்திக் காட்ட வேண்டும். ஏனென்றால், சர்க்கரை என்று எழுதி நக்கினால் இனிக்காது.

-எம்.ராம்ராஜ்.