மலட்டுத் தன்மையும் அதற்கான மருந்துகளும்! – ஆயுர்வேத மருத்துவத்தின் அற்புதங்கள்

பெறும் அவற்றுள் யாம் அறிவது இல்லை அறிவுஅறிந்த   மக்கள்வேறு அல்ல பிற.

இல்லறத்தார் பெற வேண்டிய பேறுகளுள் அறிய வேண்டியவற்றை அறிந்த நல்ல மக்களை பெறுவதை விட சிறந்த நற்பேற்றை யாம் அறியவில்லை- என்று திருவள்ளுவப் பெருந்தகை “மக்கள்பேறு” குறித்து மகத்தான கருத்தினை வலியுறுத்தியிருக்கிறார்.

ஆனால் ஏதோ ஒருசில காரணங்களால் பல பேருக்கு “குழந்தை பாக்கியம்” என்பது கிடைக்காமல் போய்விடுகிறது. பார்க்காத மருத்துவர்களையெல்லாம் பார்க்கிறார்கள், போகாத கோவில்களுக்கெல்லாம் போகின்றார்கள், வேண்டாத தெய்வத்தையெல்லாம் வேண்டுகிறார்கள். அப்படியும் பலன் கிடைக்கவில்லை யென்றால் விரக்தியில் விம்முகிறார்கள், வேதனையில் வாடுகிறார்கள். எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றுவதை போல் உற்றாரும், உறவினரும் இது போன்ற தம்பதிகளை பேடி என்றும், மலடி என்றும் ஏளனமாக பேசுவதை கேட்டு நடைப்பிணமாக வாழ்ந்து வருபவர்களும் உண்டு. ஒரு சிலர் மனமுடைந்து தற்கொலை செய்து மாண்டுப்போனவர்களும் உண்டு. இதுபோன்றப் பிரச்சினைகளுக்கு உரிய நேரத்தில் ஆயுர்வேத மருத்துவத்தின் மூலம் சிகிச்சை மேற்கொண்டால் சிறந்த பலன் கிடைக்கும்.

மலட்டுத்தன்மை என்பது ஆண், பெண் இருவரில் யாருக்க வேண்டுமானாலும் ஏற்பட வாய்ப்பு உண்டு. துரிதஸ்டவசமாக கணவன், மனைவி இருவருமே கூட, இதுபோன்று மலட்டுத்தன்மை உடையர்களாக இருப்பதை நடைமுறையில் பார்க்க முடிகிறது.

குழந்தைகள் பிறப்பதற்கு வழியில்லாதவகையில் ஆண் அல்லது பெண் உடல் இயல்பு அமைந்து விடுகிறது. சில ஆண்டுகளும், பெண்களும் பிறவியிலேயே மலடாக இருக்கின்றனர்.

நமது ஆயர்வேத மருத்துவ சாஸ்த்திரப்படி மலட்டுத்தன்மையை நமது முன்னோர்கள்

1. ஆதிவந்த்யா, 2. காகவந்த்யா, 3. கதலிவந்த்யா,

4. கர்ப்பவந்தயா என்று நான்கு வகைகளாகப் பிரித்திருக்கிறார்கள்.

ஒரு சில பெண்களுக்கு முதலில் இரண்டு குழந்தைகளைப் பெற்றபின் பிறகு பிள்ளைகள் இல்லாது போய்விடுதல் இதைதான் “காக வந்த்யா” என்றும்,

வாழை மரம் எவ்வாறு ஒரு தார்போட்ட பின்பு ஒன்றும் இல்லாமல் போய்விடுகிறதோ அவ்வாறு ஒரு பிள்ளையை மாத்திரம் பெற்றப்பின்பு கர்ப்பம் தரிக்காது போய்விடுதல் இதை “கதலி வந்த்யா” என்றும்.

வயிற்றிலேயே செத்துவிழும் குழந்தைகளை சாதாரணமாக வருடந்தோறும் பெற்றுக்கொண்டே இருத்தல் இதை “கர்ப்பவந்த்யா” என்றும் ஆயுர்வேத மருத்துவம் கூறுகின்றது.

மேலும், கடுமையான இரத்தச்சோகை மற்றும் ஊட்டச்சத்துகள் குறைபாடு காரணமாக சில பெண்கள் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பை இழக்கின்றனர். (அல்லது) கருச்சிதைவு ஏற்படக்கூடிய வாய்ப்பும் உண்டாகிறது.

ஒரு வேலை தான் கருவுற்றிருப்பதை ஒரு பெண் தெரிந்து கொள்வதற்கு முன்பே கூட இப்படி நிகழ்ந்து விடுகிறது. ஒரு பெண்ணுக்கு அடிக்கடி குறைபிரசவம் ஏற்பட்டால் ஊட்டச்சத்து குறைபாடு என்று அறிந்து கொள்ளலாம்.

மேகவெட்டை போன்ற பால்வினை நோய்களின் விளைவாகவுமு, இடுப்புக்குக்கீழ் உள்ள பகுதிகளில் ஏற்படும் அலற்சியின் காரணமாகவும் மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கு பொதுவான காரணமாக கொள்ளலாம்.

கருப்பை வளர்ச்சியின்மை, கருப்பையின் குழாய்கள் அடைப்பு (அல்லது) சுருங்கி இருத்தல், பெண்களுக்கு உற்பத்தியாகும் கருமுட்டைகள் சரியான முதிர்ச்சியும், வளர்ச்சியும் இல்லாதிருத்தல், முட்டையகத்தில் குறைப்பாடு, கர்ப்பபையுடன், பிறவியிலேயே அந்தரங்க உறுப்புகள் தப்பிதமாகவும், கோளாறுகளுடனும் அமைந்து விடுதல், சில பெண்களுக்கு கர்ப்பபை இருக்க வேண்டிய இடத்தில் இராமல் சிறிது விலகியிருத்தல் இதனால் உயிரணு போய் சேராநிலை ஏற்படுதல், சில பெண்களின் கன்னித்திரை (ஜவ்வு) விலகாமல் கடினமாக இருத்தல்.

ஒரு சில ஆண்களுக்கு அபூர்வமாக ஆண்குறியே இல்லாதிருத்தல், சிலருடைய மூத்திரத்துவராம் சரியான இடத்தில் இல்லாமல் இருப்பதால் ஆண்குறி நிமிர்ந்து நிற்காதிருத்தல், சுக்கிலத்தில் உயிரணு இல்லாமை, ஆண்குறி பிளவுபட்டிருப்பது, ஆண்குறி கீழே தொங்காதிருத்தல், ஒருசிலர் தங்கள் பருமனான சரீர அமைப்பினால் சுக்கிலத்தை வெளிப்படுத்த முடியாமை, சரீர பலம் குன்றியதால் சுக்கிலம் குறைவுப்பட்டு இருத்தல், பீஜம் சரியாக வேலை செய்யாமல் இருத்தல்.

மனத்தளர்ச்சி, வெறுப்பு, பயம், பலகீனம், அதிகப்படியான கவலை, விதைவீக்கம், நீரழிவு, சாராயம், கஞ்சா, அபீன், புகையிலை, புகை மற்றும் போதைப்பழக்கங்களுக்கு அடிமையாக இருத்தல், அளவுக்கு அதிகமான ரசாயனப் பொருட்கள் நாம் உண்ணும் உணவில் கலந்திருத்தல், பலவித நோய்களுக்காக அவ்வப்போது வீரியமிக்க ரசாயன மருந்து மாத்திரைகளை உட்கொள்ளுதல், இப்படி பல்வேறு காரணங்களால் மலட்டுத்தன்மை ஏற்பட்டு கருத்தரிப்பதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. இதனால் இல்லை ஒரு பிள்ளையென்று ஏங்க வேண்டிய நிலை உருவாகிவிடுகிறது.

இன்று அதிநவீன மருத்துவ கருவிகளும், ஆராய்ச்சிகளும் நடைமுறையில் இருந்து வருகிறது. நோய் என்ன? என்று தெரிந்து கொள்வதற்தே, ஆயிரக்கணக்கான ரூபாய்களை செலவிட வேண்டியுள்ளது. ஆனால் அக்காலத்தில் அறிகுறிகளையே அடிப்படையாக கொண்டு சிற்ப்பான முறையில் சிகிச்சை அளிக்கிறார்கள். அதே முறையில் இன்றைக்கும் சிகிச்சை செய்யமுடியும் என்பது தான் எனது கருத்தும்.

மாதவிடாய் ஏற்பட்டு நான்காவது நாள் மனைவியை புணரும்போது அந்த பெண் விலாப்பகுதிகளில் குத்துவலியை உணர்ந்தால் அப்பெண்ணுக்கு கர்ப்பாசயம் புரண்டிருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

நான்காவது நாள் புணரும்போது அப்பெண் தேகமெல்லாம் வலிக்கிறது என்று கூறினால் கர்ப்பாசயத்தில் வாயு நிறைந்திருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

புணரும் போது அப்பெண் இடைகளில் வலிக்கிறது என்று சொன்னால் கர்ப்பாசயத்தில் சதை வளர்ந்திருக்கிறது என தெரிந்து கொள்ளலாம்.

புணரும் போது அப்பெண் தன் துடைகள் வலிக்கிறது. என்று கூறினால் கர்ப்பசாயத்தில் உஷ்ணம் சேர்ந்திருக்கிறது என்று அறிந்து கொள்ளலாம்.

புணரும் போது மார்பு வலிக்கின்றது என்று அப்பெண் சொன்னால் அவளது கர்ப்பசயத்தில் சீதளம் சேர்ந்து இருக்கிறது என்று தெரிந்து தெரிந்து கொள்ள வேண்டும்.

புணரும் போது அப்பெண் சுகமும், சந்தோசமும் கொள்ளாமல், இன்னும் மையல் தீரவில்லை என்று திருப்தியடையாமல் சொன்னால் அவளது கர்ப்பாசயத்தில் மலட்டுப்புழு இருப்பதாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

புணரும் போது அப்பெண் தனது குதிங்கால் நரம்பு இழுக்கிறது என்று கூறினால் சங்காதோசம் என்று அறிந்து கொள்ளலாம்.

பிறவியிலேயே ஏற்பட்டிருக்கும் ஒருசில குறைபாடுகளைத் தவிர, மற்ற பிரச்சனைக்கு ஆயர்வேத மருத்துவத்தின் மூலம் ஆலோசனை மற்றும் சிகிச்சை  பெற்றால் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும்.

ஆயுர் வேத மருந்துகள்:

பெண்களின் மலட்டுப்புழு விழுவதற்கு:

 கழற்சிக் கொடியின் மேல்படர்ந்த சிறுகுறிஞ்சான் இலை, சீந்தில் இலை, கசப்புபாகல் இலை, பிரமி இலை, ஆடாதோடை இலை இவைகளை வகைக்கு ஒரு கைப்பிடிபறித்து எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, சாறு பிழிந்து வைத்துக்கொள்ளவும். பின்பு கழற்சிக் கொடித்தோலை 5 கிராம் அளவு எடுத்து தண்ணீர்விட்டு நன்றாக அதைத்து, மேற்சொன்ன சாறுகளுடன் கல்நது மாதவிடாய் ஆன 4 –வது நாள் தண்ணீரில் நின்றுக்கொண்டு சாப்பிட்டால் மலட்டுபுடு விழுவதோடு, கருத்தரிக்கவும் செய்யும்.

ஆண், பெண் மலடு நீங்குவதற்கு       

மஞ்சிட்டிட்டைப்பூண்டு / கடுக்காய் / அழுக்கிறாக்கிழங்கு / நெல்லிக்காய் / தோல்நன்னாரி /வேர்தான்றிக்காய் / தோல்திருநாமபாலை வேர் / கீழாநெல்லி / கரிப்பாலை வேர் / நீர்வள்ளிக்கிழங்கு / ஓமம் / மரமஞ்சள் / கடுகுரோகினி

இவைகளை வகைக்கு 15 கிராம் எடுத்து சுத்தமான பசுவின் பால்விட்டு நன்றாக அரைத்து, நெய் 1 கிலோ, பசுவின்பால் 4 லிட்டர் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து, அடுப்பின் மீதேற்றி லேசான தீயில் 3 நாட்கள் எரித்து, 4-வது நாளன்று பதத்தில் வடித்தெடுத்து, அதனுடன் ½ கிலோ சீனியை பொடித்து கலந்து கொண்டு, காலை, மாலை 5 கிராம் அளவு இந்த மருந்தை 3 மண்டலம் உட்கொண்டால் ஆண், பெண் மலடு நீங்கி புத்திரபாக்கியம் உண்டாகும்.

பால், உளுந்து, பயிறு, நெய் முதலியவைகளைத் தாராளமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

பத்தியம்: புளிப்பு, கசப்பு முதலான சுவையுள்ள பதார்த்தங்களை சாப்பிடக்கூடாது. மருந்து சாப்பிடும் காலங்களில் உடல் உறவு கொள்ளக்கூடாது.

உடல் உறவு தவிர்க்க வேண்டிய காலம்:

மாதவிடாய் நாட்கள், அஷ்டமி, சதுர்த்திகள், அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, முதலியவை தாம்பத்திய உறவுக்கு ஏற்றதல்ல.

பரணி, கிருத்திகை, பூரட்டாதி, உத்திரட்டாதி ஆகிய 12 நட்சத்திரங்களும் விலக்கப்பட வேண்டும் .

உடல் உறவுக்கு ஏற்ற காலம்:

மாதவிடாய் உண்டான 4-வது நாளில் இருந்து 16-வது நாள் வரை ரோகிணி, அஸ்தம், உத்திரம், சுவாதி, அனுஷம், மூலம், திருவோணம், சதயம், ரேவதி ஆகிய 9 நட்சத்திரங்கள் மிகவும் நல்லது.

கணவனுக்கு சூர்யநாடி செல்லுகையில், பெண்ணிற்கு சந்திரநாடியாக இருக்க வேண்டும். அது ஓர் நல்ல நாளாகவும் இருக்க வேண்டும்.

கணவனுக்கு சுவாசம் வலது நாசியில் ஒடிக் கொண்டிருக்கும்போது, பெண்ணிற்கு இடது நாசியில் ஓக்கொண்டிருக்கும் சமயம் பார்த்து கணவன், மனைவி இருவரும் ஒருமித்த மனதுடன் நல்லதொரு எண்ணத்துடன் உடல் உறவு கொண்டால் கர்ப்பம் தரிக்கும். குழந்தை ஆரோக்கியத்தோடு மட்டுமல்லாது, அறிவான குழந்தையாகவும் பிறக்கும்.

குறிப்பு:மேற்சொன்ன மருந்துகளைத் தவிர, இன்னும் ஏராளமான மருந்துகள் ஆயர்வேத மருத்துவத்தில் இருக்கின்றன. எனவே ஆயுர்வேத மருத்துவரை அணுகி சிகிச்சைப் பெற்றால் பூரண சுகம் கிடைக்கும்.

பன்றிக் காய்ச்சல் என்று பரப்பரப்பாக வர்ணிக்கும் இன்புளுவான்சா (INFLUINZA) மற்றும் ஜ்வரம் நோய் குறித்து விரிவான விளக்கம்.
மாதவிடாய் பிரச்சனைகளும் அதற்கான மருந்துகளும்… – ஆயுர்வேத மருத்துவத்தின் அற்புதங்கள்