கடுகு உள்ளம் கொண்ட கருணாநிதியின் கபட நாடகம்!

mk1`

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளி வந்து இன்னும் 3 நாட்கள் கூட முடியவில்லை. அதற்குள் தனது தமையன் மு.க.ஸ்டாலினுக்கு 23-05-2016 அன்று சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்ற முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்ற அரசு விழாவில், முதல் வரிசையில் இடம் போட்டு  அமர வைத்து அழகு பார்க்கவில்லை என்று, திமுக தலைவர் மு.கருணாநிதி ஒப்பாரி வைத்துள்ளார்.

pr230516a_0

23-05-2016 அன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மு.க. ஸ்டாலின்.

23-05-2016 அன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மு.க. ஸ்டாலின்.

மேலும், பிறவிக் குணத்தை விடாத ஜெயலலிதாவின் பழி வாங்கும் போக்கு என்றும், தேர்தலில் தோற்றுப் போன சரத்குமாருக்கு முதல் வரிசையில் இடம் போட்டு அமர வைத்து வேண்டுமென்றே திராவிட முன்னேற்றக் கழகத்தை திட்டமிட்டு அவமானப்படுத்திய ஜெயலலிதாவைப் பார்க்கும்போது இன்னும் அவர் திருந்தவில்லை, திருந்தப் போவதுமில்லை என்று தான் தெளிவாகப் புரிகிறது என்றும், மு.கருணாநிதி புலம்பித் தள்ளியிருக்கிறார். அத்தோடு மட்டும் அவர் நிறுத்தவில்லை. தமிழ் மக்கள் அல்லவா திருந்த வேண்டும் என்றும் ஆதங்கப்பட்டிருக்கிறார்.

ஏதோ வயதாகி விட்டதால் மு.கருணாநிதி இப்படி புலம்புகிறார் என்று மட்டும் தயவு செய்து யாரும் நினைத்து விடாதீர்கள்.

‘கல்யாண வீட்டுக்கு போனால் தானே மாப்பிள்ளையாக இருக்க வேண்டும். சாவு வீட்டுக்கு போனால் தானே பிணமாகவும் இருக்க வேண்டும்’ என்று நினைக்ககூடியவர் மு.கருணாநிதி. இதுதான் அவரது பிறவிக்குணம்.

தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழக்கும் போதெல்லாம், தமிழர்களையும், தமிழக மக்களையும் வசைப்பாடுவதே திமுக தலைவர் மு.கருணாநிதிக்கு வாடிக்கையாகிவிட்டது.

முந்தைய காலங்களில் தேர்தலில் திமுக தோற்ற போது தமிழர்கள் சோத்தால் அடித்த பிண்டங்கள்” என்று பேசிய மு.கருணாநிதி, இன்று “தமிழ் மக்கள் திருந்த வேண்டும்” என்று எரிச்சலடைந்து இருக்கிறார்.

ஆளுவதற்கு பிள்ளைகள் இருந்தும் கூட, 6-வது முறையாக தமிழகத்தின் முதல்வராக தானே அரியணையில் அமர்ந்துவிட வேண்டும் என்று, 93 வயதிலும் அடங்காத ஆசை கொண்டு பல்வேறு துஷ்ட மற்றும் துரோகச் செயல்களில் ஈடுப்பட்டு பார்த்தார் மு.கருணாநிதி. ஆனால், தமிழக மக்கள் அதற்கு வாய்ப்பு அளிக்கவில்லை.

24.05.2016 அன்று சென்னையில் நடைப்பெற்ற திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்.

24.05.2016 அன்று சென்னையில் நடைப்பெற்ற திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்.

அதனால்தான் வேறு வழியில்லாமல், சட்டமன்ற திமுக குழுத் தலைவர் பொறுப்பை இன்று (24.05.2016) மு..ஸ்டாலினிடம் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி ஒப்படைத்துள்ளார்.

ஒருவேளை இத்தேர்தலில் திமுக ஜெயித்திருந்தால், தமிழக முதல்வர் பதவியை மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்திருப்பாரா மு.கருணாநிதி?

தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி நினைப்பதை போல, சொல்வதைப்போல, அரசு விழாக்களிலோ, பொது நிகழ்ச்சிகளிலோ அல்லது தனிப்பட்ட சந்திப்பிலோ இதுவரை மு.. ஸ்டாலினை, என்றைக்குமே ஜெ.ஜெயலலிதா அவமதித்ததுமில்லை, அவமானப்படுத்தியது மில்லை. அவ்வளவு ஏன்? மு..ஸ்டாலினை, அரசியல் எதிரியாக கூட, ஜெ.ஜெயலலிதா இதுவரை என்றைக்குமே நினைத்ததில்லை. அதற்கு பல நிகழ்வுகளை உதாரணமாக சொல்ல முடியும்.

ஜெ.ஜெயலலிதா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் 02.03.2002 அன்று தமிழக முதல்வராக பதவியேற்றபோது.

ஜெ.ஜெயலலிதா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் 02.03.2002 அன்று தமிழக முதல்வராக பதவியேற்றபோது.

02.03.2002 அன்று ஜெ.ஜெயலலிதா இதே சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் தமிழக முதல்வராக பதவியேற்றபோது, அப்போது சென்னை மேயராக இருந்த மு.க. ஸ்டாலினுக்கு முதல் வரிசையிலும், எதிர்க்கட்சித் தலைவர் க.அன்பழகனுக்கு நான்காவது வரிசையிலும் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.

எதிர்க்கட்சித் தலைவர் க.அன்பழகனுடன், மு.க.ஸ்டாலின்.

எதிர்க்கட்சித் தலைவர் க.அன்பழகனுடன், மு.க.ஸ்டாலின்.

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் நான்காவது வரிசையில் அமர்ந்திருந்ததால், மு.க.ஸ்டாலினும், நான்காவது வரிசையில் அமர நேரிட்டது. இதை மு.கருணாநிதி 04.03.2002 அன்று அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் ஜெஜெயலலிதாவை நேரில்  சந்தித்து மு.க.ஸ்டாலின் சுனாமி நிதி வழங்கியபோது.

தமிழக முதலமைச்சர் ஜெஜெயலலிதாவை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் சுனாமி நிதி வழங்கியபோது.

அதேபோல், 2004-ஆம் ஆண்டு சுனாமியால் தமிழகம் பாதிக்கப்பட்டிருந்தபோது, தி.மு.க. சார்பில் வசூலிக்கப்பட்ட 21 லட்சம் ரூபாய் நிதியை, அப்போது தமிழக முதல்வராக இருந்த ஜெ.ஜெயலலிதாவை நேரில் சந்தித்து காசோலை அளிக்க மு.க.ஸ்டாலின் சென்ற போது, அவரை மகிழ்ச்சியோடு வரவேற்றதோடு, நலம் விசாரித்து வழியனுப்பி வைத்தார் ஜெ.ஜெயலலிதா.

நடிகர் சரத்குமார் குடும்பத்திற்கும், தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி குடும்பத்திற்கும், ஏதாவது தனிப்பட்ட முறையில் விரோதம் இருந்தால், அதை அவர்கள் தனியாக பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு, ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்த  ஒரு மாநிலத்தின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சரவை பதவியேற்பு விழாவை, ஒரு நடிகரோடு ஒப்பிட்டு குற்றப்படுத்தி குறைக் கூறியிருப்பது கருணாநிதியின் கடுகு உள்ளத்தைதான் பிரதிபளிக்கிறது.

இந்தியாவின் மூத்த அரசியல்வாதியாகவும், பெரியாரின் பிள்ளையாகவும், பேரறிஞர் அண்ணாவின் தம்பியாகவும், தன்னை அடிக்கடி  பிரகடனப்படுத்திக்கொள்ளும் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி. அரசியல் நாகரீகத்தையும், தமிழர்களின் பண்பாட்டைப் பற்றியெல்லாம் அடிக்கடி வாய்கிழிய பேசுகிறார். 

dmk president mk.2dmk president mk

பினராய் விஜயன், மம்தா பானர்ஜி,  சர்பானந்த சோனோவால் ஆகியோருக்கு, மு.கருணாநிதி எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ள வாழ்த்துக் கடிதங்கள்.

பினராய் விஜயன், மம்தா பானர்ஜி, சர்பானந்த சோனோவால் ஆகியோருக்கு, மு.கருணாநிதி எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ள வாழ்த்துக் கடிதங்கள்.

தற்போது இந்தியாவில் நடைப்பெற்று முடிந்த 5 மாநில சட்டப் பேரவை தேர்தல்களில் வெற்றிப் பெற்று முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அஸ்ஸாம் முதலமைச்சர் சர்பானந்த சோனோவால், கேரளா முதலமைச்சர் பினராய் விஜயன் ஆகியோருக்கு தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை மு.கருணாநிதி எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

ஆனால், தமிழக முதலமைச்சராக  பொறுப்பேற்ற ஜெ.ஜெயலலிதாவுக்கு ஒப்புக்காகக் கூட வாழ்த்து சொல்ல மு.கருணாநிதிக்கு மனமில்லை.

அந்த வகையில் பார்க்கும்போது தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியை விட, மு.க. ஸ்டாலின் எவ்வளவோ மேல் என்றுதான் சொல்ல வேண்டும்.

தி.மு.க.தலைவர் பதவிக்கு நானே ஸ்டாலினை முன்மொழிவேன் என்று 06.01.2013 அன்று மு.கருணாநிதி பகிரங்கமாக அறிவித்தார். அடுத்த 30 தினங்களில் அப்போது திமுகவில் இருந்த நடிகை குஷ்புவை தூண்டிவிட்டு, ஸ்டாலினுக்கு எதிராக பேச வைத்தார். அதன் விளைவாக ஆத்திரமடைந்த ஸ்டாலின் ஆதரவாளர்கள் 30 பேர் கொண்ட ஒரு கும்பல் 07.02.2013 அன்று திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள பெமினா ஓட்டலில் தங்கி இருந்த நடிகை குஷ்பு மீது செருப்பு வீசி தாக்குதல் நடத்தினார்கள். அதே நாளில் சென்னையில் நடிகை குஷ்புவின் வீட்டையும் தாக்கினார்கள். என் வீடு தாக்கப்பட்டதால், எனது குழந்தைகள் பயத்துடன் உள்ளனர் என்று, திருச்சி விமான நிலையத்தில் நடிகை குஷ்பு பேட்டியளித்தார்.

இந்த கொடுமையெல்லாம் தாங்க முடியாமல்தான், நடிகை குஷ்பு திமுகவில் இருந்து வெளியேறி, காங்கிரசில் தஞ்சமடைந்தார். இதற்கு முக்கிய காரணமே, தி.மு.க. தலைவர் மு.கருணாநிதிதான்.

தன்னை விட்டு தலைமை பதவி போய்விடக் கூடாது என்பதற்காக, பெற்ற பிள்ளைகளுக்குள்ளேயே விரோதத்தை வளர்த்து விட்டு, இன்று வரை தலைவர் பதவியை தக்கவைத்து வரும் ஒரு தந்தை உலகத்தில் யாராவது இருக்கிறார்களா என்றால், அது மு.கருணாநிதியாக மட்டும் தான் இருக்கும். இப்படிப்பட்ட மு.கருணாநிதிதான் இன்று மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக பேசுகிறார்.

போர்களத்தில் ஒப்பாரியையும், பொது நிகழ்ச்சிகளில் தனிப்பட்ட மரியாதையையும் பொருட்படுத்தக்கூடாது என்ற பொதுவான நடைமுறையைக் கூட புரிந்து கொள்ளாத மு.கருணாநிதியின் செயல்பாட்டை, பொறுப்பற்ற தன்மை என்று சொல்வதைவிட, பொறாமையின் வெளிப்பாடு என்று சொல்வதுதான் மிகப்பொருத்தமாக இருக்கும்.

pr230516c

ஏனென்றால், தமிழக முதலமைச்சராக பதவியேற்ற அன்றைய தினமே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் 5 முக்கிய கோப்புகளில் ஜெ.ஜெயலலிதா கையெழுத்திட்டுள்ளார். இதனால் தமிழக மக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இதன் மூலம் தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் அரசியல் செல்வாக்கு, ஒரே நாளில் உச்சத்திற்கு சென்றுள்ளது.

இதனால் வயிற்றெரிச்சலில் இருக்கும் மு.கருணாநிதி, இதை நீர்த்துப் போக செய்ய வேண்டும் அல்லது இதில் இருந்து தமிழக மக்களின் கவனத்தை வேறு பக்கம் திசைத் திருப்ப வேண்டும் என்ற கெட்ட நோக்கத்தில் இதுப்போன்ற பிரச்சனைகளை  மு.கருணாநிதி கிளப்பி வருகிறார்.

-டாக்டர் துரைபெஞ்சமின்
ullatchithagaval@gmail.com