மோசடி பேர்வழி விஜய் மல்லையாவுக்கு ஏப்ரல் 2–ந் தேதி வரை அமலாக்கத்துறை அவகாசம்!  

ED1EDkingfisher

மோசடி பேர்வழி விஜய் மல்லையா தனது கிங்பிஷர் விமான நிறுவனத்துக்கு பல்வேறு வங்கிகளில் ரூ.9,000 கோடி வரை கடன் வாங்கினார். விமான நிறுவனம் கடுமையான நஷ்டத்துக்கு ஆளானதால் அவரால் கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை.

இதையடுத்து அவருக்கு எதிராக கோர்ட்டு மூலம் வங்கிகள் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இந்த விவகாரத்தில் கருப்பு பண விவகாரம் மற்றும் பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது.

இதில் அவரிடம் விசாரணை நடத்துவதற்காக மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று (18.03.2016) நேரில் ஆஜராக வேண்டும் என்று விஜய்மல்லையாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டன.

முன்கூட்டியே தப்பித்து லண்டன் சென்றுவிட்ட விஜய்மல்லையா இன்று (18.03.2016) அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகவில்லை. இந்த நிலையில் அவர் அமலாக்கத்துறை முன் ஆஜராக ஏப்ரல் மாதம் வரை அவகாசம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். தவிர்க்க முடியாத காரணத்தால் ஆஜராக முடியவில்லை என்றும் அதில் தெரிவித்துள்ளார்.

அவரது கோரிக்கையை பரிசீலித்த அமலாக்கத்துறை, முடிவில் அவருக்கு ஏப்ரல் மாதம் வரை அவகாசம் அளிப்பது என முடிவு எடுக்கப்பட்டது. வருகிற ஏப்ரல் 2–ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று விஜய் மல்லையாவுக்கு அமலாக்கத்துறை புதிய சம்மன் அனுப்பியுள்ளது.

-எஸ்.சதிஸ் சர்மா.