தி.மு.க.கட்சிக்காக மற்றவர்களை விட நான் கூடுதலாக உழைத்துள்ளேன்: மு.க.அழகிரி ஆவேசம்!

M.K.Alagiri

தி.மு.க-காங்கிரஸ் இரண்டிற்குமே கொள்கை இல்லை. காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருந்தோம், அமைச்சரவையில் இருந்தோம், அதன் பிறகு காங்கிரஸை விட்டு விலகினோம், தி.மு.க. விலகியது. அதன் பிறகு காங்கிரஸ் கட்சியை தி.மு.க. நன்றி கெட்டவர்கள் என்றனர். 

நன்றி கெட்டவர்கள் என்று கூறிவிட்டு, பிறகு கனிமொழி எம்.பி. பதவிக்காகச் சென்று பிச்சை எடுத்தார்கள். மீண்டும் காங்கிரஸுடன் கூட்டணி என்கிறார்கள். அதனால்தான் இரண்டு கட்சிகளுக்குமே கொள்கையே இல்லை என்கிறேன். வரும் சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறாது என்பது என்னுடைய கருத்து அவ்வளவுதான். இவ்வாறு தனியார் தொலைக்காட்சிக்கு மு.க.அழகிரி அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

திமுககாங்கிரஸ் கூட்டணி குறித்து, மு.க.அழகிரி கூறிய கருத்துக்கு, தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

M.K.Alagiri Face book

இந்நிலையில்,  ” தி.மு.க. பற்றி கருத்து சொல்ல நீ யார் என, என்னை யாரும் கேட்க முடியாது. ஏனெனில், இந்த கட்சிக்காக மற்றவர்களை விட நான் கூடுதலாக உழைத்துள்ளேன். பலமுறை சிறை சென்றுள்ளேன். நான் தவறு செய்துள்ளேன் என்று சொன்னால்அது கட்சிக்காக நடந்த தவறாகவே இருக்கும்.

இப்படித்தான், கட்சி மீது நான் பற்றுதலோடும், விசுவாசத்தோடும் இருந்திருக்கிறேன். அதனால் கட்சியைப்பற்றி கவலைப்படவும், தவறாக செல்லும் போது கேள்வி கேட்கவும் எனக்கு உரிமை உள்ளதுஎன்று தமது முகநூலில் மு..அழகிரி கருத்துத் தெரிவித்துள்ளார்.

போகிறப்போக்கைப் பார்த்தால் மு..அழகிரி தனது ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசித்து வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமைக்கு எதிராக மிகப்பெரிய அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பார் என்றே தெரிகிறது.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com