சர்வதேச தரகர் சுப்ரமணியன் சுவாமிக்கு பிடிவாரண்டு: அசாம் நீதிமன்றம் உத்தரவு!

sswamy

சர்வதேச தரகர் சுப்ரமணியன் சுவாமி, கடந்த மார்ச் 15-ந் தேதி அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

அதில் மசூதிகள் தொடர்பாக அவர் பேசியது வெறுப்புணர்வை தூண்டும் வகையில் இருந்ததாக கூறி, அவருக்கு எதிராக அசாம் மாநிலம் கரிம்கஞ்ச் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இவ்வழக்கில், அவருக்கு மார்ச் 19-ந் தேதி நீதிமன்றம் சம்மன் பிறப்பித்தது. ஆனால், அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இந்நிலையில், சுப்ரமணியன் சுவாமிக்கு எதிராக ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்து அசாம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 30-ந் தேதியோ அல்லது அதற்கு முன்போ பிடி வாரண்டை செயல்படுத்துமாறு கூறியுள்ளது.

இதையடுத்து, இந்த உத்தரவுக்கு எதிராக சுப்ரமணியன் சுவாமி இன்று சுப்ரீம் கோர்ட்டை அணுகினார்.

Hon'ble Mr. Justice Prafulla Chandra Pant.

Hon’ble Mr. Justice Prafulla Chandra Pant.

Hon'ble Mr. Justice Amitava Roy.

Hon’ble Mr. Justice Amitava Roy.

நீதிபதிகள் பி.சி.பந்த், அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால பெஞ்ச் முன்பு முறையிட்டார். உரிய காலத்தில் மனு விசாரணைக்கு எடுக்கப்படுவதற்கு தேவையான நடைமுறைகளை செய்யுமாறு சுப்ரமணியன் சுவாமிக்கு, நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

-டாக்டர் துரைபெஞ்சமின்.

drduraibenjamin@yahoo.in